மதுவுக்கு அடிமையான பெண்கள், மாதவிடாய் நின்றபிறகு தசை சுருக்கத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஒரு புதிய தகவலில் தெரியவந்துள்ளது.
நம் உடலில் ஒரு குறிப்பிட்ட வயது வரை, தசை மற்றும் தோல் பகுதிகள் பொலிவுடன் காணப்படும். புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்றவற்றுக்கு தீவிர அடிமையாக இருக்கும்பட்சத்தில், வெகு விரைவிலேயே நம் உடலின் பொலிவு மங்கிவிடும்.
பெண்கள் கடுமையான மதுப்பழக்கத்திற்கு அடிமையாகும்போது, 45 வயதிற்கு மேல், அவர்களின் தோல் மற்றும் சதைப் பகுதி சுருங்கத் தொடங்குவதாக, தெரியவந்துள்ளது.
குறிப்பாக, மாதவிடாய் நின்றபிறகே, இத்தகைய பாதிப்புகள் கடுமையான பெண்களை தாக்க தொடங்குவதாகவும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஈஸ்ட்ரோஜன் சுரப்பை மதுப்பழக்கம் குறைத்துவிடுவதால், தசையின் கட்டுக்கோப்பு சீர்குலைந்துவிடுவதாக, அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பாதிப்புக்கு சார்கோபினியா என்று அறிவியல் ரீதியாக பெயரிடப்பட்டுள்ளது. ஒரு கட்டத்திற்கு மேலாக, எலும்புக்கூடை போன்ற தோற்றம் ஏற்படுத்திவிடும்.