தலைவலி என்பது அனைவருக்கும் அவ்வப்போது வந்து போவது தான். தலைவலி ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். ஆனால், சிலருக்கு எப்போதாவது தலைவலி வந்தால், சிலருக்கோ அடிக்கடி வரும் தலைவலி மிகுந்த வேதனையைக் கொடுக்கும். தலைவலி கடுமையாக இருந்தால், மருந்துகளை எடுத்துக் கொள்கிறோம். ஆனால் சிலருக்கு மருந்து மாத்திரைகள் ஒத்துக் கொள்வதில்லை.
மருத்துவர் ஆலோசனை இன்றி அடிக்கடி மாத்திரை மருந்துகள் மற்றும் தலைவலி தைலங்களை பயன்படுத்தும் பொழுது, அது பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, தலைவலியை குறைக்க இயற்கையான வழிமுறைகளையே பலரும் விரும்புகின்றனர். எளிதாக கிடைக்கும், அதே சமயம் எந்த வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத சில மூலிகைகள் இவை.
தலைவலிக்கு தொடர்ந்து மருந்துகள் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என நினைப்பவர்கள் நிச்சயம் இந்த இயற்கையான மூலிகைகளை முயற்சி செய்து பார்க்கலாம்.
மேலும் படிக்க | கர்ப்பப்பை அகற்றம் குறித்து பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்
வேப்பிலை
வேப்பிலைகளில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. வயிற்றுப் பிரச்சனைகள், புண் என காயத்திற்கு வேப்பிலை யன்படுத்தப்படுகின்றன. வேப்ப எண்ணை, தலைவலியிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது.
வேப்ப எண்ணெய் இல்லை என்றால், தேங்காய் எண்ணெயில் வேப்பிலையைப் போட்டு சிறிது நேரம் வெயிலில் வைக்கவும். இந்த எண்ணெயை தலையில் தடவி வந்தால், தலைவலி ஓடியேப் போய்விடும்.
கற்றாழை
கற்றாழை என்பது பெண்களின் அழகு பராமரிப்புக்கான பொருள் மட்டுமல்ல, கற்றாழை பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டது. தற்போது இதை உணவுகளிலும் சேர்க்கின்றனர். காற்றாழை சாற்றை ஜூஸாகவும் பருகுகின்றனர். இதில் உள்ள தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் வலி மற்றும் வீக்கத்திலிருந்து நிவாரணம் கொடுக்கின்றன.
தலைவலியை போக்க, கற்றாழை ஜெல்லை நேற்றியில் தேய்க்கலாம். 20 நிமிடங்கள் வரை அதை நெற்றியில் அப்படியே காயவிட்டு, பிறகு கழுவலாம். குளிர்ச்சியான உடல்வாகு கொண்டவர்கள், இதனுடன் சற்று கிராம்பு எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை சேர்த்துக் கொள்ளவும்.
மருதாணி இலைகள்
பொதுவாக மருதாணி இலைகளை, அரைத்து அதை கைகளுக்கு வைப்பது பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். இதை ஒரு சிலர் இயற்கையான ஹேர்டை ஆகவும் பயன்படுத்துகிறார்கள். மருதாணி இலைகள் தலைவலியையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது.
மருதாணி இலைகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் இலைகளை நீக்கிவிட்டு அந்த நீரினை மட்டும் குடிக்கலாம். இது உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு மட்டுமின்றி தலைவலியையும் குறைக்க உதவும்.
புதினா இலைகள்
புதினாவில் பாக்டீரியா எதிர்ப்பு, கிருமி நாசினிகள் மற்றும் வலி நிவாரணி பண்புகள் உள்ளன, இவை பல நோய்களை சீராக்குகின்றன. மன அழுத்தம் அல்லது வானிலை மாற்றதினால் தலைவலி ஏற்பட்டால், புதினா இலைகளை அரைத்து நெற்றியில் தடவலாம்.
புதினா இலைகளுக்கு பதிலாக புதினா எண்ணெயையும் பயன்படுத்தலாம். தலைக்கு புதினா எண்ணெயை கொண்டு மென்மையாக மசாஜ் செய்தால் தலை வலியிலிருந்து விரைவில் நிவாரணம் பெறலாம். உடலின் மற்ற பகுதிகளில் வலி இருந்தாலும் புதினா எண்ணெயை பயன்படுத்தலாம். புதினாவை கஷாயமாகவோ அல்லது தேநீராகவோ செய்து பருகினால் தலைவலி போயே போச்சு என்று சந்தோஷமாக கூச்சலிடலாம்.
மேலும் படிக்க | நீரிழிவு நோயை ஒழித்துக் கட்டும் ‘சில’ எளிய வீட்டு வைத்தியங்கள்!
மருதாணி இலைகள்
பொதுவாக மருதாணி இலைகளை, அரைத்து அதை கைகளுக்கு வைப்பது பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். இதை ஒரு சிலர் இயற்கையான ஹேர்டை ஆகவும் பயன்படுத்துகிறார்கள். மருதாணி இலைகள் தலைவலியையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது.
மருதாணி இலைகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் இலைகளை நீக்கிவிட்டு அந்த நீரினை மட்டும் குடிக்கலாம். இது உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு மட்டுமின்றி தலைவலியையும் குறைக்க உதவும்.
வில்வ இலை
தலைவலிக்கு மிகவும் நல்ல பலன் கொடுக்கும் வில்வ மரத்தில் பட்டை அல்லது இலைகளைகஷாயம் செய்து குடிக்கலாம். இதை துளசியைப் போலவே, தேயிலையுடன் சேர்த்து கொதிக்க வைத்து தேநீராக பருகலாம். தலைவலியிலிருந்து உடனடி நிவாரணம் பெற இது உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ