Health Tips: சாப்பிட்ட உடனே இந்த பயிற்சிகளை செய்தால் செரிமானத் தொல்லை இருக்காது

Exercise For Digestion:உடல் ஆரோக்கியமாக இருக்க உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது மிகவும் முக்கியமாகும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 15, 2022, 02:54 PM IST
  • நடைப்பயிற்சி ஒரு வகையான உடற்பயிற்சிதான்.
  • இதன் மூலம் நீங்கள் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க முடியும்.
  • அதனால்தான் உணவு உண்ட பிறகு எப்போதும் நடப்பது நல்லது என கூறப்படுகின்றது.
Health Tips: சாப்பிட்ட உடனே இந்த பயிற்சிகளை செய்தால் செரிமானத் தொல்லை இருக்காது title=

செரிமானத்திற்குப் பிறகான உடற்பயிற்சி: இன்றைய அவசர வாழ்க்கை முறையில், யாருக்கும் தங்களுக்கென செலவிட நேரமில்லை. இது அவர்களது ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. 

எனினும், உடல் ஆரோக்கியமாக இருக்க உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது மிகவும் முக்கியமாகும். பெரும்பாலான மக்கள் உணவு உண்ட உடனேயே வேலை செய்ய தொடங்கி விடுகிறார்கள், அல்லது தூங்கச் சென்று விடுகிறார்கள். இதனால் உணவு ஜீரணமாவதில் பிரச்சனை ஏற்படுகின்றது. 

இதனால் உடலின் செரிமான அமைப்பு பலவீனமடையத் தொடங்குகிறது. ஆகையால், நீங்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், உணவு உண்ட பிறகு, கண்டிப்பாக உங்களுக்கென 20 நிமிடங்கள் ஒதுக்க வெண்டியது மிக முக்கியமாகும். இந்த நேரத்தில் உங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். உங்களை எப்படி கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடியும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.  

மேலும் படிக்க | உடலுக்கு எதிர்ப்பு சக்தி தரும் துளசி டீ, தயாரிப்பும் பலன்களும் 

உணவு உட்கொண்ட பிறகு இந்தப் பயிற்சிகளைச் செய்யுங்கள்:

நடைப்பயிற்சி: 

நடைப்பயிற்சி ஒரு வகையான உடற்பயிற்சிதான். இதன் மூலம் நீங்கள் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க முடியும். அதனால்தான் உணவு உண்ட பிறகு எப்போதும் நடப்பது நல்லது என கூறப்படுகின்றது. உணவு உண்ட பிறகு நடப்பது உணவு செரிமானத்தை எளிதாக்குகிறது. 

செரிமான அமைப்பில் அதிக அழுத்தம் ஏற்படுவதில்லை. அதே சமயம், உணவு உண்ட பிறகு நடைபயிற்சி செய்தால் வாயுப் பிரச்சனை, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். ஆகையால்  தினமும் உணவு உண்ட பிறகு 15 நிமிடம் நடக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

அட்மிண்டைன் (admintine) ​போஸ்:

உணவை சாப்பிட்ட பிறகு, நீங்கள் அட்மிண்டைன் போஸிலும் உட்காரலாம். அட்மிண்டின் போஸில் அமர்ந்தால் உணவு எளிதில் ஜீரணமாகும். உணவுக்குப் பிறகு இதுவே சிறந்த உடற்பயிற்சியாகக் கருதப்படுகிறது.

சுகாசனம்:

சுகாசனத்தில் அமர்ந்தாலும் உணவை எளிதாக ஜீரணிக்க முடியும். ஆனால் சாப்பிட்ட பிறகு சுகாசனில் 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே அமர வேண்டும். இதற்குப் பிறகு நீங்கள் நடக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் உடலில் ஆற்றல் அதிகரிக்கும். மேலும் நீங்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். இது தவிர வயிறு சம்பந்தமான நோய்களில் இருந்தும் நிவாரணம் காணலாம். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகளுக்கு வெந்தயம் ஒரு வரப்பிரசாதம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News