மாம்பழத்தை சாப்பிட்ட பிறகு, பெரும்பாலான மக்கள் அதன் தோலை தூக்கி எறிந்து விடுவார்கள். வீணாகக் கருதப்படும் இந்த மாம்பழத் தோல்கள் ஆரோக்கியத்திற்குப் பெரும் பொக்கிஷம் என்பதை மிகச் சிலரே அறிந்திருக்கிறார்கள். கோடை காலம் வந்துள்ளதால், சந்தையிலும் மாம்பழங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. மாம்பழங்களை விரும்பாதவர்கள் கூட இந்த நேரத்தில் மாம்பழத்தை சாப்பிடாமல் இருக்க மாட்டார்கள். அப்படி, மாம்பழத்தை சாப்பிடும் போது, மக்கள் அதன் தோலை கழிவு என்று நினைத்து எறிந்து விடுகிறார்கள். ஆனால் இந்த மாம்பழத் தோல்கள் ஆரோக்கியத்தின் பொக்கிஷம் என்பதை மிகச் சிலரே அறிந்திருக்கிறார்கள். இன்று நாம் மாம்பழத்தோலின் 5 சிறந்த நன்மைகளைப் தெரிந்து கொள்வோம்.
மாம்பழத்தோலின் ஆரோக்கிய நன்மைகள்
சுருக்கங்களில் இருந்து நிவாரணம்
முகத்தில் சுருக்கங்களால் சிரமப்படுபவர்கள் மாம்பழத் தோலை உலர வைக்க வேண்டும். அதன் பிறகு, அவற்றை நன்றாக அரைத்து, அதில் ரோஸ் வாட்டரை கலக்கவும். அதன் பிறகு, முகத்தில் தடவினால், சுருக்கங்கள் குறைந்து, முகம் பொலிவாக மாறும்.
மேலும் படிக்க | யூரிக் அமிலத்தைக் குறைக்க எளிய வழிமுறை! இந்த ‘இலை’ இருந்தால் பிரச்சனை இல்லை
புற்றுநோயை குணப்படுத்துகிறது
புற்றுநோயை குணப்படுத்தும் இயற்கையான கூறுகள் மாம்பழத் தோல்களில் காணப்படுகின்றன. இது உடலில் உள்ள இறந்த செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. இதனால், உடலில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் வெகுவாகக் குறைகிறது. மேலும், உடல் எடையை குறைக்கவும் உதவியாக இருக்கிறது.
இயற்கை உரம்
தாமிரம், ஃபோலேட் மற்றும் வைட்டமின்கள், பி6, ஏ மற்றும் சி ஆகியவை மாம்பழத்தோலில் அதிக அளவில் காணப்படுகின்றன. இதனுடன், தாவரங்களுக்கு கிடைக்கும் நார்ச்சத்தும் இந்த தோல்களில் அதிக அளவில் உள்ளது. கரிம உரமாக பயன்படுத்தக்கூடியது.
பருக்களை போக்க
முகத்தில் பரு இருக்கும் போது அவற்றுக்கு பயன்படுத்தினால் மாம்பழத்தோல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாம்பழத்தோலை அரைத்து பேஸ்ட் செய்து, பின்னர் அவற்றை பருக்கள் மீது தடவவும். சில நாட்களில், பரு தானே மறைந்துவிடும்.
ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்தது
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மாம்பழத் தோல்களில் ஏராளமாகக் காணப்படுகின்றன. இவை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் தீங்கு விளைவிக்கும் பாதிப்பைக் குறைக்க உதவுகின்றன. இந்த ஃப்ரீ ரேடிக்கல்கள் கண்கள், இதயம் மற்றும் தோலுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் இவற்றை மாம்பழத் தோல்கள் மூலம் கட்டுப்படுத்தலாம்.
மேலும் படிக்க | ஜிம் எல்லாம் தேவையில்லை... இதை செஞ்சாலே போதும்... சட்டென்று வெயிட் குறையும்!
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ