Health Alert! ஜூஸ் உடன் மாத்திரை எடுத்துக் கொள்ளலாமா; நிபுணர்கள் கூறுவது என்ன..!!

சிலருக்கு பழச்சாறுடன் மருந்து சாப்பிடும் பழக்கம் உள்ளது. ஆனால், இது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 3, 2022, 05:39 PM IST
  • பழச் சாறுடன் ஒருபோதும் மருந்து உட்கொள்ள வேண்டாம்.
  • உடல் ஆரோக்கியத்தில் பெரும் ஆபத்து ஏற்படலாம்.
  • பழச்சாறு-மருந்து கலவை ஆபத்தானது.
Health Alert! ஜூஸ் உடன் மாத்திரை எடுத்துக் கொள்ளலாமா; நிபுணர்கள் கூறுவது என்ன..!! title=

பெரும்பாலான மக்களுக்கு மருந்து எடுத்துக் கொள்ள தண்னீருக்கு பதிலாக ஜூஸ் அருந்தும் வழக்கம் உள்ளது. இருப்பினும், இதைச் செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் இது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. பழச்சாறுகளுடன் மருந்து உட்கொள்ளக்கூடாது. அந்த பழக்கம் இருந்தால் உடனே மாற்றிக் கொள்ளுங்கள். சில சமயங்களில் மருந்தை சாறுடன் சேர்த்து சாப்பிடும்போது மருந்தின் செயல் திறனும் பெரிய அளவில் குறையும்.

பழச் சாறுடன் மருந்து சாப்பிட வேண்டாம்

பழச்சாறுடன் மருந்து உட்கொள்வது சில நேரங்களில் ஒவ்வாமைக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், திராட்சை, ஆரஞ்சு மற்றும் சில சமயங்களில் ஆப்பிள் சாறுடன் மருந்து உட்கொள்வது உங்களுக்கு ஆபத்தானது.

பழச்சாறு மற்றும் மருந்து கலவை ஆபத்தானது

பழச் சாறு இரத்த ஓட்டத்தில் செல்லும் மருந்துகளின் அளவைக் குறைக்கிறது என்று கூறப்படுகிறது. எனவே, இரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பழச் சாறுடன் மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும் படிக்க | Men's Health: ஆண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு ‘இவை’ அத்தியாவசியம்

உடல் நலன் பாதிக்கப்படலாம்

ஆண்டிபயாடிக் மருந்துகள், புற்றுநோய் மருந்துகள் உட்பட பல மருந்துகளை, ஆரஞ்சு, ஆப்பிள் மற்றும் திராட்சை சாறுகளுடன் எடுத்துக் கொள்ளும் போது, மருந்தின் செயல்திறன் மிகவும் குறையும் என்று ஒரு ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது. ஆராய்ச்சியில், பழசாற்றுடன் மருந்து சாப்பிட்ட பிறகு, பாதி மருந்து மட்டுமே உடலுக்குள் செல்லும். சாறுகள் மருந்தினை உடல் உறிஞ்சும் திறனைக் குறைக்கின்றன.

தண்ணீருடன் மருந்து எடுத்துக் கொள்ளுங்கள்

மருந்தை எப்போது ஒரு கிளாஸ் தண்ணீருடன் எடுத்துக் கொள்ளுங்கள். மருந்தை தண்ணீருடன் எடுத்துக்கொள்வது மிகவும் பாதுகாப்பானது. மருந்தை மிக சிறிதளவு தண்ணீர் சேர்த்து சாப்பிட்டால் உடலில் சரியாக கரையாது. ஆனால் அதிக தண்ணீர் சேர்த்து எடுத்துக் கொண்டால் அவை எளிதில் கரையும். அதே போல் குளிர்ந்த நீருடன் கூட மருந்து உட்கொள்வதையும் தவிர்க்கவும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.)

மேலும் படிக்க | Weight loss Tips: உடல் எடை குறைய தினசரி பழக்கத்தில் ‘சில’ சிறிய மாற்றங்களே போதும்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News