Health Alert: சிறுநீரக கல் இருந்தால் ‘இந்த’ உணவுகளுக்கு NO சொல்லுங்க!

நீங்கள் உண்ணும் சில உணவுகள் சிறுநீரக கற்களின் அபாயத்தை அதிகரிக்கின்றன. எனவே சிறுநீரக ஆரோக்கியத்திற்கு நாம் உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 17, 2022, 10:09 AM IST
  • கால்சியம்-ஆக்சலேட் அதிகம் உள்ள சில உணவுகள் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கலாம்.
  • சில உறுப்புகள் பாதிக்கப்பட்டால், உடலின் முழு செயல்பாட்டையுமே பாதித்து விடும்.
  • கீரையைப் போலவே, கத்தரிக்காயிலும் ஆக்சலேட்டுகள் உள்ளன.
Health Alert: சிறுநீரக கல் இருந்தால் ‘இந்த’ உணவுகளுக்கு NO சொல்லுங்க! title=

நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் மிக முக்கியமானதாக இருந்தாலும், சில உறுப்புகள் பாதிக்கப்பட்டால், உடலின் முழு செயல்பாட்டையுமே பாதித்து விடும். அதில் ஒன்று சிறுநீரகம். மாறிவரும் வாழ்க்கை முறையால் சிறுநீரக கற்கள் இன்று மிகவும் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் நமது உணவு பழக்கம். ஆம், நீங்கள் உண்ணும் கால்சியம்-ஆக்சலேட் அதிகம் உள்ள சில உணவுகள் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கலாம். எனவே இந்த உணவுகளை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதோடு, சிறு நீரக கல் பிரச்சனை உள்ளவர்கள், இதனை எப்போதாவதோ அல்லது மிக குறைந்த அளவிலோ எடுத்துக் கொள்ள வேண்டும். 

கீரை

உங்களுக்கு ஏற்கனவே கற்கள் பிரச்சனை இருந்தால், கீரை அதிகமாக  சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளீங்கள். ஏனெனில் அது பிரச்சனையை மேலும் அதிகரிக்கிறது. கீரையில் உள்ள ஆக்ஸாலிக் அமிலம் உடலில் கால்சியம்-ஆக்சலேட்டை ஏற்படுத்தும். இதன் காரணமாக சிறுநீரக கல்லின் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது.

கத்தரிக்காய்

கீரையைப் போலவே, கத்தரிக்காயிலும் ஆக்சலேட்டுகள் உள்ளன, இது கற்களின் அளவை அதிகரிக்க உதவுகிறது. சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் கத்திரிக்காய் சாப்பிடக்கூடாது.

மேலும் படிக்க | Brain Health: மூளையை பாதிக்கும் ஆபத்தான பழக்கங்களுக்கு ‘NO’ சொல்லுங்க

தக்காளி 

தக்காளி சிறுநீரக கல் அபாயத்தை அதிகரிக்கிறது. தக்காளி விதையில் உள்ள ஆக்சலேட் உடலில் கற்களை உண்டாக்குகிறது. தக்காளியில் ஆக்சலேட் குறைந்த அளவில் காணப்பட்டாலும், தேவைக்கு அதிகமாக தக்காளியை உட்கொள்வது பிரச்சனையை அதிகரிக்கும்.  

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை அதிகமாக உட்கொள்வதால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. வெள்ளரிக்காயை அதிகமாக உட்கொள்வதால், உடலில் பொட்டாசியத்தின் அளவு அதிகரிக்கிறது. இது 'ஹைபர்கேலீமியா' என்று அழைக்கப்படுகிறது. 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Health Tips: மூளை வளர்ச்சிக்கு உதவும் 'Vitamin B12' நிறைந்த சில உணவுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News