நியூடெல்லி: புத்தாண்டு என்றாலே, அதை வரவேற்கும் கொண்டாட்டங்களே மனதில் முதலில் தோன்றும். அதில், இன்றைய காலங்களில், இரவு நேர விருந்தில் மது அருந்தி, ஆடல் பாடல்களுடன் புதிய ஆண்டை வரவேற்கும் பழக்கம் அதிகரித்திருக்கும் நிலையில், அதன் பலனாக புத்தாண்டின் முதல் நாளிலேயே ‘ஹேங்-ஓவர்’ பிரச்சனையையும் எதிர்கொள்வது வழக்கமாகிவிட்டது. உண்மையில், ஆல்கஹால் ரத்த நாளங்களை விரிவுபடுத்தும் பண்பு கொண்ட ஒரு வாசோடைலேட்டர் ஆகும்,
இது உடலின் மையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கும் ரத்தத்தை திசை திருப்புகிறது. ஆல்கஹால் உட்கொள்ளும்போது கன்னங்கள் மற்றும் மூக்கு சிவப்பதற்கு காரணம் இதுதான். ஆரம்பத்தில், மது அருந்துவது ஜாலியாக இருந்தாலும், அதன் பின்விளைவுகள் மோசமானது. பிற பானங்களுடன் ஒப்பிடும்போது ஆல்கஹால் உடலால் விரைவாக உறிஞ்சப்படுகிறது.
மது என்பது வயிற்றால் உறிஞ்சப்படுவது என்பதும், பின்னர் அது உடல் முழுவதும் பரவி, மூளை மற்றும் கல்லீரல் உட்பட எல்லா உறுப்புகளுக்கும் விநியோகிக்கப்படுவதும் தான் பாதிப்புகளுக்குக் காரணம்.
மது அருந்தியதும், என்சைம்கள் மற்றும் சிறிய மூலக்கூறுகளை உருவாக்கும் கல்லீரல், ஆல்கஹாலை,அசிடால்டிஹைடாக (எத்தனால்) உடைக்கிறது, பின்னர் அது அசிட்டிக் (எத்தனோயிக்) அமிலமாகவும் பின்னர் கார்பன் டை ஆக்சைடாகவும் உடைகிறது.
மேலும் படிக்க | எச்சரிக்கை! மாரடைப்புக்கு முக்கிய காரணமாகும் ஆபத்தான பழக்கங்கள்!
இதன் தொடர்ச்சியாக, அதிகப்படியான உண்ணுதலின் ஆபத்துகளைப் பற்றி நமக்கு நினைவூட்டும் உடலின் முயற்சியாக ஹேங்ஓவர் உருவாகிறது.வயிற்றுப்போக்கு, சோர்வு, தலைவலி, குமட்டல் மற்றும் நடுக்கம் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். அப்போது, சில நேரங்களில், சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது, இதயம் இயல்பை விட வேகமாக துடிக்கிறது, வியர்வை அதிகமாக உற்பத்தியாகின்றன.
தூக்கத்தின் போது குடிப்பழக்கம் மூளையின் செயல்பாட்டில் குறுக்கிடுகிறது என்பதால், ஆழ்ந்த தூக்கமின்மையும் ஹேங்-ஓவரை ஏற்படுத்துகிறது. இரத்தத்தில் ஆல்கஹால் அளவு குறையத் தொடங்கிய பிறகு ஹேங்கொவர் தொடங்குகிறது.
எனவே, ஹேங்-ஓவரைத் தவிர்க்க, அதிக அளவு தண்ணீர் அருந்தவும். ஏனென்றால், ஆல்கஹால் சிறுநீர் கழிப்பதை ஊக்குவிக்கிறது, ஹேங்ஓவரில் வயிற்றுப்போக்கு, வியர்த்தல் அல்லது வாந்தி இருந்தால், உடலில் நீரிழப்பு அதிகமாக இருக்கலாம்.
மேலும் படிக்க | Uric Acid: மஞ்சள் கொண்டு எளிதாய் கட்டுப்படுத்தலாம், வழிமுறை இதோ
கார்போஹைட்ரேட்டுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். மது அருந்தியது, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கலாம், பலர் மது அருந்தும்போது அதிகம் சாப்பிடுவதில்லை என்பதால், அவர்களின் இரத்த சர்க்கரை அளவு குறைந்துவிடும். எனவே ஜூஸ் குடிப்பது உடல்நிலையை சீராக்கும்.
வலி நிவாரணியை எடுத்துக் கொள்ளுங்கள், ஆனால் டைலெனால் அல்ல. ஆஸ்பிரின், இப்யூபுரூஃபன் மற்றும் பிற ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (NSAIDகள்) தலைவலி மற்றும் ஒட்டுமொத்த வலி உணர்வுகளுக்கு உதவலாம். NSAID கள், ஏற்கனவே மதுவால் எரிச்சலடைந்த வயிற்றை எரிச்சலடையச் செய்யலாம்.
காபி அல்லது டீ குடிக்கவும். காஃபினில் ஹேங்கொவர் எதிர்ப்பு சக்திகள் ஏதும் இல்லை என்றாலும், அது மனச்சோர்வுக்கு உதவக்கூடும்.
வைட்டமின்கள் மற்றும் துத்தநாகம் ஹேங்-ஓவரில் இருந்து வெளிவர உதவலாம். அதிகப்படியான குடிப்பழக்கத்திற்கு முன்னும் பின்னும் 24 மணிநேர உணவுகளை மதிப்பீடு செய்த ஒரு ஆய்வு, துத்தநாகம் மற்றும் பி வைட்டமின்கள் உள்ளவர்களுக்கு குறைவான கடுமையான ஹேங்கொவர் இருப்பதை கண்டறிந்துள்ளது.
மேலும் படிக்க | பிறந்தது ஆங்கில புத்தாண்டு - மக்கள் உற்சாக வரவேற்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ