ஒற்றை தலைவலி பாடாய் படுத்துகிறதா... இந்த உணவுகளுக்கு ‘NO’ சொல்லுங்க..!!

ஒற்றைத் தலைவலி (Migraine) என்பது மூளையில் திடீரென ஏற்படும் ஒரு நிகழ்வின் தாக்கமே.  மைக்ரோன் தலைவலி  என்பது உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள், தீவிரமான தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நரம்பியல் தொடர்பான ஒரு நோய். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 29, 2023, 06:23 PM IST
  • மைக்ரைன் தலைவலியை சாதாரணமாக எண்ன வேண்டாம்.
  • அன்றாட வேலைகளைக் கூட செய்ய முடியாதபடி தலைவலி மிக கடுமையாக இருக்கும்.
  • ஒற்றைத் தலைவலியின் போது காரணமின்றி வாந்தி ஏற்படும்.
ஒற்றை தலைவலி பாடாய் படுத்துகிறதா... இந்த உணவுகளுக்கு ‘NO’ சொல்லுங்க..!! title=

ஒற்றைத் தலைவலி (Migraine) என்பது மூளையில் திடீரென ஏற்படும் ஒரு நிகழ்வின் தாக்கமே.  மைக்ரோன் தலைவலி  என்பது உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள், தீவிரமான தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நரம்பியல் தொடர்பான ஒரு நோய். ஒற்றைத் தலைவலிக்கான சரியான காரணம் அறியப்படாவிட்டாலும், மூளையில் செரோடோனின் என்னும் ஹார்மோன் அளவு மாறுபடுவதே பிரதான காரணமாக கருதப்படுகிறது. மைக்ரைன் தலைவலியை சாதாரணமாக எண்ன வேண்டாம். அன்றாட வேலைகளைக் கூட செய்ய முடியாதபடி தலைவலி மிக கடுமையாக இருக்கும். திடீர் வயிற்றுப் புரட்டல் ஏற்படும். எந்த உணவுப் பொருளையும் சாப்பிட பிடிக்காது. ஏன் பார்க்கவே பிடிக்காது.

ஒன்றைத் தலைவலியின் போது காரணமின்றி வாந்தி ஏற்படும். என்ன சாப்பிட்டாலும் வாந்தி வரும். அதனால், ஒன்றுமே சாப்பிடத் தோன்றாது. வெளிச்சத்தினால் தலைவலி அதிகமாகும் என்பதால், பாதிக்கப்பட்டவர்கள், விளக்கை அணைத்து விடுவது நல்லது. ஒற்றை தலைவலி உள்ளவர்களுக்கு இருட்டு இதமாக இருக்கும். அதே போல், தலைவலி உள்ளவர்களுக்கு சிறிய சத்தம்கூட இவர்களுக்கு எரிச்சல் தரும். ஒற்றை தலைவலி அல்லது மைக்ரைன் தலைவலிக்கான முக்கிய காரணம், மூளை இயக்கத்திற்கு தேவையான செட்டடோனின் ஹோர்மோன் போதுமான அளவு மூளைக்குக் கிடைக்காத காரணத்தால் பெருமூளை ரத்த நாளங்கள் சுருக்கி ரத்த ஓட்டம் தடைப்பட்டு ரத்த மண்டல அழற்சி ஏற்படுகின்றது.

இது தவிர, மாதவிலக்கு, மன அழுத்தம், மாதவிலக்கின் போது மன அழுத்தம், மது அருந்துதல், நாள்பட்ட சீஸ் உணவுகளை உண்ணுதல், அதிக வெப்பம் அல்லது அதிக குளிர், நைட்ரேட் மாத்திரைகள், உயர்வான இடத்தின் அழுத்தம், அதிக சத்தம், அதிக வெளிச்சம், புகை, சிகரெட், வெப்பம் போன்றவையும் இவற்றுக்கு காரணமாக இருக்கலாம். எந்த வயதிலும் தலைவலி ஏற்படலாம். ஆனால் சிலருக்கு தலைவலி அதிகமாகி மிகவும் தீவிரமடையும் போது பாதிப்பு ஒரு நாளைக்கு மேல் கூட நீடிக்கலாம்.  அப்படிப்பட்டவர்கள் சில பொருட்களை அதிக அளவில் சாப்பிடுவது தலைவலியை ஏற்படுத்தும். இது குறித்து எச்சரிக்கையாக இருந்தால், ஒற்றை தலைவலியை ஓரளவு கட்டுப்படுத்தலாம். 

மேலும் படிக்க | எலும்புகளையும் திசுக்களையும் பாதிக்கும் ‘விட்டமின் D3’ குறைபாடு... அறிகுறிகள் இவை தான்!

பதப்படுத்தப்பட்ட உணவுகள் சிலருக்கு ஒற்றைத் தலைவலியை தூண்டலாம். அதிக அளவு சோடியம் உட்செல்வது ரத்த அழுத்தத்தை அதிகரித்து தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலியை தூண்ட கூடும். இன்டஸ்டன்ட் நூடுல் பொருட்கள், சூப்கள், சுவையூட்டும் கலவைகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் உள்ளிட்ட பல உணவுகளில் மோனோசோடியம் குளுட்டமேட் (MSG) சேர்க்கப்படுகிறது. இது ஒற்றை தலைவலியை (Migraine Headache) தூண்டலாம்.

சீஸ் என்னும்  பாலாடைக்கட்டி  அதிகம் சாப்பிடுவது தலைவலியை ஏற்படுத்தலாம். நீங்கள் சீஸ் அதிகம் விரும்பி சாப்பிடுபவர் என்றால் உங்களது மைக்ரேனுக்கு இது காரணமாக இருக்கலாம். ஏனென்றால் இதில் ஒற்றைத்தலைவலியை தூண்ட கூடிய இயற்கையான கெமிக்கலான டைரமைன் அதிகம் உள்ளது.

ஆல்கஹால் எடுப்பது ரத்த நாளங்களை ரிலாக்ஸ் செய்கிறது என்றாலும், மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரித்து ஒற்றை தலைவலியை ஏற்படுகிறது. ஒற்றைத் தலைவலி உள்ளவர்களில் சுமார் 35.6% பேருக்கு மதுபானங்கள் வலியை தூண்டுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.  அதே போல் ரெட் ஒயின் தலைவலியைத் தூண்டும். எனவே, உங்களுக்கு ஏற்கனவே தலைவலி  இருந்தால், ரெட் ஒயின் குடிப்பதைத் தவிர்க்கவும்.

மேலும் படிக்க | நீரிழிவு நோயை ஒழித்துக் கட்டும் ‘சில’ எளிய வீட்டு வைத்தியங்கள்!

பெரும்பாலானோர் காலையில் எழுந்தவுடன் பால் குடிப்பார்கள். ஆனால் சில சமயங்களில் பால் தலைவலியை ஏற்படுத்தும். எனவே உங்களுக்கு ஏற்கனவே தலைவலி இருந்தால் அதை உட்கொள்வதை தவிர்க்கவும். அதோடு, காபியில் உள்ள காஃபின் அடினோசின் எனப்படும் இயற்கையாக நிகழும் மற்றும் அவசியமான மூளைப் பொருளின் செயல்பாட்டை பாதிக்கிறது. ஒற்றை தலைவலியின் போது ரத்தத்தில் அடினோசின் அளவு அதிகரித்து நரம்புக்குள் செல்வது ஒற்றைத் தலைவலியை தூண்டுகிறது. 

ஒற்றைத் தலைவலியை தூண்டும் சாக்லேட்  சாப்பிடுவதில் மைக்ரைன் நோயாளிகள் கவ்ஃஅனமாக இருகக் வேண்டும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். மைக்ரேனை தூண்டும் உணவாக சாக்லேட் இருக்க காரணம் அதில் இருக்கும் காஃபின் மற்றும் பீட்டா-ஃபைனிலெதிலமைனாக இருக்கலாம் என்கின்றனர். இந்த இரண்டுமே ஒற்றைத் தலைவலியை தூண்டக்கூடியவையாக இருக்கின்றன.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Weight Loss Tips: உடல் பருமனை சட்டென்று குறைக்க உதவும் ‘மேஜிக்’ மசாலாக்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News