Eyes vs Death: காலன் கண்ணில் தெரிவாரா? கண்களை எமனாலும் ஏமாற்ற முடியாது!

மரணத்தையும் கண்களால் கணிக்க முடியும் என்கிறது ஆராய்ச்சி... ஆதாரங்களுடன் கண்ணின் திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 19, 2022, 04:14 PM IST
  • மரணத்தையும் கண்களால் கணிக்க முடியும்
  • கண்ணின் திறன் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது
  • காலனாலும் கண்களை கட்டிப்போட முடியாது
Eyes vs Death: காலன் கண்ணில் தெரிவாரா? கண்களை எமனாலும் ஏமாற்ற முடியாது! title=

கண்களால் மரணத்தை கணிக்க முடியும் என்று ஆதாரங்களுடன் ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். மரணத்தை கண்களால் கணிக்கலாம் என்பதற்கான சாத்தியமான ஆதாரங்களை வைத்திருப்பதாக ஆஸ்திரேலியாவில் உள்ள விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஒருவரின் மரணத்தை கணிக்க வேண்டும் என்று உங்களுக்கு எப்போதாவது தோன்றியிருக்கிறதா? இதற்காக ஒருசில மணித்துளிகளை செலவழித்ததுண்டா? 

மனிதனின் கண்களை ஸ்கேன் செய்து பார்த்தால், மரணத்தை கணிக்கலாம் என்று விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.  

இது தொடர்பான ஆராய்ச்சிக்கு பிறகு, ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) திட்டத்தை வகுத்துள்ளனர், இது ஒரு நபரின் விழித்திரையை-கண்ணின் பின்புறத்தில் உள்ள திசுக்களைப் பார்த்து அவரது வாழ்நாளைக் கணிக்க உதவும்.

ALSO READ | 7 வயது மாணவருக்கு பதிலாக பள்ளிக்கு செல்லும் ரோபோ!

பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஆப்தால்மாலஜியில் (British Journal of Ophthalmology) புதன்கிழமை வெளியிடப்பட்ட கண்டுபிடிப்புகள், விழித்திரை பற்றிய ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டவை.

ஒருவரின் ஆரோக்கியத்தை ஆழமாக ஆராய்ந்து பார்க்க மருத்துவர்களை அனுமதிப்பதில், இது ஒரு "சாளரமாக" செயல்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மெல்போர்னின் கண் ஆராய்ச்சி மையத்தைச் (Melbourne's Centre for Eye Research) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், செயற்கை நுண்ணறிவு கணக்கீடு அல்காரிதம் (AI algorithm) கிட்டத்தட்ட 19,000 ஃபண்டஸ் ஸ்கேன்களை  (fundus scan) பகுப்பாய்வு செய்த பிறகு விழித்திரை வயதைத் துல்லியமாகக் கணிப்பதாகக் கூறினர்.

EYE

 கண்ணின் உட்புறத்தின் தொடர் புகைப்படங்களை எடுக்கும் செயல்முறை fundus scan என்று அறியப்படுகிறது.

"விழித்திரை ஒரு தனித்துவமான, அணுகக்கூடிய சாளரத்தை வழங்குகிறது என்றும், ஆஸ்திரேலியாவில் கண் ஆராய்ச்சி மேம்பட்டிருப்பதாகவும், மெல்போர்ன் பல்கலைக்கழகம் மற்றும் மையத்தின் கண் நோய் தொற்றுநோயியல் பேராசிரியரான ஆய்வு ஆசிரியர் டாக்டர் மிங்குவாங் ஹி கூறுகிறார்.

இந்த ஆய்வில் இங்கீலாந்தைச் சேர்ந்த 40 முதல் 69 வயதுக்குட்பட்ட 500,000 க்கும் பங்கேற்பாளர்கள் கலந்துக் கொண்டனர். அவர்களிடன்  இருந்து பெறப்பட்ட மாதிரிகளிலிருந்து 130,000 விழித்திரைப் படங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.  

ஒரு நபரின் உண்மையான வயது மற்றும் கண்ணில் அடையாளம் காணப்பட்ட வயதான உயிரியல் வயது ஆகியவற்றுக்கு இடையில் வித்தியாசம் இருக்கிறது.  

ALSO READ | Kidney Health: சிறுநீரகத்தை டேமேஜ் செய்யும் இந்த '5' உணவுகளை தவிர்க்கலாமே..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News