எச்சரிக்கை! உங்கள் கிட்னியை காலி செய்யும் ‘சில’ ஆபத்தான பழக்கங்கள்!

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமானால், சிறுநீரகம் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியம். நமது உடலில் உள்ள அழுக்குகளை அகற்றுவதே சிறுநீரகத்தின் செயல்பாடு. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 11, 2023, 12:38 PM IST

Trending Photos

எச்சரிக்கை! உங்கள் கிட்னியை காலி செய்யும் ‘சில’ ஆபத்தான பழக்கங்கள்! title=

கிட்னி அதாவது சிறுநீரகம் மனித உடலின் மிக முக்கியமான பகுதியாக கருதப்படுகிறது. உடலின் அனைத்து பாகங்களும் வெவ்வேறு செயல்பாடுகளைக் கொண்டுள்ளன. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமானால், சிறுநீரகம் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியம். நமது உடலில் உள்ள அழுக்குகளை அகற்றுவதே சிறுநீரகத்தின் செயல்பாடு. சிறுநீரகம் சரியாகச் செயல்படவில்லை என்றால் பல நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது.  சிறுநீரகம் பழுதடைந்தால், பாதிக்கப்பட்ட நபர் உயிர் வாழ முடியாத நிலை ஏற்படும். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கலாம் என்றாலும்,  அதன் செயல்முறை மிகவும் சிக்கலானது. சிறுநீரக நோயாளிகளின் வாழ்க்கை மிகவும் சாவால்களும் சிக்கல்களும் நிறைந்ததாக இருக்கும். எனவே சிறுநீரக நோய்கள் நம்மை அண்டாமல் காத்துக் கொள்ள வேண்டும். இன்றைய வாழ்க்கை முறை மிகவும் பிஸியாகிவிட்டது. தவறான உணவுப் பழக்கத்தால் சிறுநீரகங்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் நமது பல கெட்ட பழக்கங்களால் நிகழ்கின்றன. சில கெட்ட பழக்கங்களால் சிறுநீரகம் பாதிக்கப்படும் என்பது மிகச் சிலருக்குத் தெரியும்.

 சிறுநீரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் சில பழக்கங்கள்

சிறுநீர் கழிப்பதை அடக்குவது

ஒரு நபர் ஏதாவது வேலைக்காக பயணம் செய்யும் போதோ அல்லது எங்காவது பயணம் செய்யும் போதோ, அத்தகைய சூழ்நிலையில் ஒருவர் சிறுநீரை அடக்கி வைத்திருக்கும் நிலையை பெரும்பாலும் காணலாம். குறிப்பாக பெண்கள் இந்த பிரச்சனைகளை அதிகம் சந்திக்கும் நிலை உள்ளது. பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, பொது கழிப்பறை வசதி இல்லை என்றால், சிறுநீரை அடக்கி வைக்கின்றனர். ஆனால் இப்படி செய்வது சரியல்ல. எபோதாவது என்றால் பாதிப்பு இருக்காது. ஆனால், அடிக்கடி சிறுநீரை அடக்குவதால் ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும்.

குறைவான அளவு தண்ணீர் குடிக்கும் பழக்கம்

உங்கள் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், உங்கள் உடலில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பது தான் சிறந்தது. அப்போதுதான் உடலின் மற்ற பாகங்களும் சரியாக செயல்பட முடியும். உடலில் நீர் பற்றாக்குறை இருந்தால், உடலில் இருந்து நச்சு பொருட்கள் வெளியேற முடியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிறுநீரகம் சரியாக இயங்காது. மேலும் இதன் காரணமாக சிறுநீரக கற்கள் உருவாகின்றன. எனவே, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலில் உள்ள நச்சுக்கள் சிறப்பாக வெளியேற உதவுகிறது.

மேலும் படிக்க | காலையில் எழுந்ததும் இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிட கூடாது!

சிறுநீரகத்தை சேதப்படுத்தும் உணவுகள்

உணவில் அதிக கவனம் செலுத்தாமல் அவசர அவசரமாக நொறுக்குத் தீனிகளை உட்கொள்பவர்கள் ஏராளம். இது சிறுநீரகங்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, நீங்கள் உங்கள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், உங்கள் உணவில் பச்சை காய்கறிகள் மற்றும் புதிய பழங்கள் போன்றவற்றை உட்கொள்ளுங்கள்.  மேலும் அளவிற்கு அதிக உப்பு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.  அதிக பொட்டாசியம் உள்ள காய்கறிகளை அளவோடு சாப்பிட வேண்டும். அதிக இனிப்பு உள்ள சோடா வகைகள், குளிர் பானங்கள், அளவிற்கு அதிக இனிப்பு ஆகியவை கிட்னியை காலி செய்து விடும்.

நீரிழிவும் சிறுநீரக பாதிப்பும்

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டை மீறினால், படிப்படியாக சிறுநீரகத்தில் இருக்கும் இரத்த நாளங்களை சேதப்படுத்தும். இந்த இரத்த நாளங்கள் பலவீனமடையத் தொடங்கும் போது, ​​​​சிறுநீரகத்தால் இரத்தத்தை சரியாக சுத்தம் செய்ய முடியாது. இதன் காரணமாக உயர் ரத்த அழுத்த பிரச்சனை தொடங்கி சிறுநீரக பாதிப்பும் ஏற்படும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | தூங்குவதற்கு முன்பு பாலில் கலந்து குடிக்க வேண்டியவை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News