வயதைக் குறைத்து காட்ட பல சிகிச்சைகள் இருந்தாலும், தனிப்பட்ட ஒழுக்கம் இருந்தால் மட்டுமே இளமையை தக்க வைக்க முடியும். நம் உடலின் முக்கிய உறுப்பு தோல். சிலருக்கு பரம்பரையாகவே, மாசு மருவற்ற பொலிவான சருமம் இருக்கும்.
ஆரோக்கியமான உணவை சேர்ப்பதன் மூலம் முதுமையிலும் இளமை பார்க்க முடியும். அவை என்னவென்று பார்போம்.
தயிர்
தயிரில் உள்ள லாக்டிக் ஆசிட், சருமத்தில் உள்ள கருமையை நீக்கும் தன்மை கொண்டது. ஆகவே தினமும் தயிரை முகம் மற்றும் கை, கால்களில் தடவி ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால், முகம் பொலிவாகும்.
மீன்
மனித மூளையின் பல்வேறு செயற்பாடுகளுக்கு அவசியத்தேவையாக இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மீன்களில் அதிக அளவு இருப்பது இதற்கான முக்கிய காரணமாக இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். எனவே மீன் சாபிட்டால் கெட்ட கொழுப்பு குறைத்து இளமையான தோற்றம் பெற முடியும்.
தர்பூசணி
தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதுடன், கொழுப்புக்கள் முற்றிலும் இல்லாததால், உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு சிறந்த உணவுப்பொருள். இந்த பழமானது உடலுக்கு மட்டும் நன்மைகளை வாரிக் கொடுப்பது மட்டுமின்றி, அழகை அதிகரிக்கவும் பெரிதும் உதவியாக உள்ளது
வெள்ளரிக்காய்
உடலின் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும் வெள்ளரி. இதை சூப், ஊர்காய், சலாத், சான்ட்விச் போன்றதாக செய்து சாப்பிடலாம். வெள்ளரியை அழகு பராமரிப்புக்காகவும் பயன்படுத்தலாம்.
அவகோடா
எண்ணெய்ச் சத்து மிகுந்த அவகோடாவின் சதைப் பகுதி வைட்டமின், புரதம் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்தது. வறண்ட சருமத்தினருக்கு இப்பழம் ஒரு வரப் பிரசாதம். எண்ணெய் சத்து மிகுந்த இப்பழம் அழகு சாதனப் பொருட் தயாரிப்பில் முக்கிய இடம் வகிக்கின்றது.