மாதவிடாய் காலத்தில் ‘இதை’ மட்டும் செய்யாதீங்க! அப்பறம் ஆபத்துதான்..

Menstruation Mistakes Tamil : மகளிர், மாதவிடாய் காலங்களில் சில விஷயங்களை செய்தால் அது அவர்களை ஆபத்தில் கொண்டு சென்று விட்டுவிடும் என சில மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றன. அவை என்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Apr 1, 2024, 04:44 PM IST
  • மாதவிடாய் சமயத்தி பெண்கள் செய்யக்கூடாதவை..
  • செய்தால் என்ன ஆபத்து வரும்..
  • தண்ணீர் குடிக்கவில்லை என்றால் பிரச்சனையா?
மாதவிடாய் காலத்தில் ‘இதை’ மட்டும் செய்யாதீங்க! அப்பறம் ஆபத்துதான்.. title=

Menstruation Mistakes Tamil : பெரும்பாலான மகளிருக்கு மாதவிடாய் காலங்கள் மிகவும் கடினமானவையாக பார்க்கப்படுகின்றன. அந்த சமயத்தில் ஒரு சிலர், தன் உடலுக்கு ஒத்துழைக்காத உணவை கூட சாப்பிட மாட்டார்கள். ஒவ்வொரு பெண்களின் உடலும் ஒவ்வொரு வகையில் இருக்கும். அவர்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அனுபவும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், பொதுவாகவே பெண்கள் மாதவிடாய் காலத்தில் சில விஷயங்களை செய்தால் பின்பு உடல் நலக்குறைவு ஏற்படும் என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சில மருத்துவ ஆராய்ச்சிகளும் அதற்கு சான்றாக அமைகின்றன. அப்படி, மாதவிடாயின் போது செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன? இங்கு பார்ப்போம். 

தண்ணீர் குடிப்பது..

இது, மாதவிடாய் காலத்தில் மட்டுமல்ல எல்லா காலத்திலும் செய்யக்கூடாத தவறாகும். குறிப்பாக மாதவிடாய் நேரத்தில் பலருக்கு பசி உணர்வு கூட ஏற்படாத நிலை வரலாம். இந்த நேரத்தில் தண்ணீர் குறைவாக குடிக்கவே கூடாது என்கின்றனர் மருத்துவர்கள். இதற்கு காரணம், பலர் மாதவிடாய் சமயத்தில் அடிக்கடி கழிப்பறைக்கு செல்ல விரும்புவதில்லை என்பதுதான். ஆனால், தண்ணீரை தேவையான அளவு குடித்தால், வயிறு வீக்கமாவது, வயிறு வலி, நீர்ச்சத்து இல்லாததால் தலைவலி வருவது போன்ற விஷயங்களை தவிர்க்கலாம். தண்ணீர் மட்டுமல்ல, மாதவிடாய் காலத்தில் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளையும் பெண்கள் எடுத்துக்கொள்ளலாம். 

வேக்சிங் செய்வது:

கை, கால்கள், அக்குள் மற்றும் அந்தரங்க பகுதியில் இருக்கும் முடிகளை எடுக்க, பெண்கள் பலர் வேக்சிங் செய்வது வழக்கம். இதை செய்கையில் எந்த இடத்தில் வேக்சிங் செய்கிறோமோ, அந்த இடத்தில் அதிக வலி ஏற்படும் என்பது அதை செய்து கொள்பவர்களுக்கு தெரியும். மாதவிடாய் சமயங்களில் நமது சருமம் இன்னும் கூட மிருதுவாக மாறும் என கூறப்படுகிறது. இதனால், இந்த சமயத்தில் வேக்சிங் செய்ய வேண்டாம் என்றும், முடிந்த சில நாட்களுக்கு பிறகு இதை செய்து கொள்ளலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

மாத்திரைகள்..

பலருக்கு, மாதவிடாய் காலத்தில் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு வயிற்று வலி ஏற்படும். இதற்காக மருத்துவர்களும் சில வலி நிவாரணி மாத்திரைகளை எழுதி கொடுக்கின்றனர். இது, அந்த சமயத்திற்கு வலி ஏற்படாமல் செய்தாலும் அதன் பின்னர் உடல் உபாதைகளை ஏற்படுத்தும் என சில மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றனர். இந்த வலி நிவாரணி மாத்திரைகளில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் மருந்துகளால் வாயு பிரச்சனையும் வருவதற்கு வாய்ப்புள்ளதாம். அதனால், பெரும்பாலான சமயங்களில் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதை தவிர்த்துவிட்டு, ஹீட் தெரபி, வலியை நிவாரணம் செய்யும் உடற்பயிற்சிகள், இயற்கை வைத்தியங்கள் போன்றவற்றை பின்பற்றலாம் என கூறப்படுகிறது.

தூக்கம்:

மாதவிடாய் சமயத்தில் தூக்கமில்லாமல் இருப்பது, மாதவிடாய் சூழற்சியை இன்னும் மோசமாக்கும் என்கின்றனர், மருத்துவர்கள். இந்த சமயத்தில் சரியாக தூங்கவில்லை என்றால் மன நிலை மாற்றங்கள், சோர்வு, உடல் வலி ஆகியவை ஏற்படுமாம். அதனால் இந்த சமயத்தில் சரியான நேரத்தில் தூங்கி எழ வேண்டுமாம். 

காபியும் சர்க்கரையும்..

இயல்பாகவே, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பேணிக்காக்க வேண்டும் என்றால் நமது உணவு பழக்கத்தில் இருந்து கஃபைன் மற்றும் சர்க்கரையை நீக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுவதுண்டு. கஃபைன், வயிறு வீக்கம் மற்றும் ஹார்மோன் மாறுபாடுகளுக்கு சில சமயங்களில் காரணமாக அமைகிறது. மாதவிடாய் சமயத்தில் இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஏற்படலாம். ஆனால், அப்படி கிரேவிங்ஸ் ஏற்படும் போது அதற்கு மாற்றாக இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்லலாம். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக் கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News