புதுடெல்லி: உடல் எடையை குறைப்பதற்காக படாதபாடு பட்டாலும், மத்திம வயதுக்காரர்களுக்கு அது எப்போதும் கவலையளிக்கும் கானல்நீராகவே இருக்கும். உடற்பயிற்சி செய்தால் உடல் எடை குறையும் என்றாலும் உடற்பயிற்சி செய்வதற்கான நேரம் பலருக்கு கிடைப்பதில்லை.
எனவே, உடற்பயிற்சியைத் தவிர, உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் உண்ணும் உணவிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உடற்பயிற்சி செய்வதால் மட்டும் உடல் எடையை குறைக்க முடியாது, இதற்கு உணவிலும் மாற்றம் செய்ய வேண்டும்.
உணவும், அதை சாப்பிடும் முறையும் நமது உடலின் எடையை நேரடியாக பாதிக்கிறது. சிந்திக்காமல் சாப்பிடுவது, எடை அதிகரிப்பு என்ற நிலைக்கு கொண்டு செல்கிறது. உடல் எடையை குறைக்க இந்த உணவுகள் உதவும்.
மேலும் படிக்க | வாழைப்பழத்தின் உதவியுடன் முடிக்கு கெரட்டின் கிரீம் தயாரிக்கலாம்
இந்த உணவுகள் உங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவும், இதனால் உங்கள் எடை இழப்பு பயணத்தில் பெரிதும் பங்களிக்கும் உணவுகளாக இவை இருக்கும். இவை, எடையைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், தேவையான அளவு புரதம், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளையும் உங்களுக்கு வழங்கும். ஆரம்பிக்கலாம்.
முட்டைகள்
எளிதில் கிடைக்கக்கூடிய முக்கிய உணவுகளில் ஒன்றான முட்டைகள் பி வைட்டமின் ஆதாரத்தைக் கொண்டசிறந்த உணவு ஆதாரங்களாகும், இது உடலின் அனைத்து செல் சவ்வுகளின் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும்.
ஆய்வுகளின்படி, முட்டைகளில் உள்ள சத்தானது, உள்ளுறுப்பு கொழுப்பு திரட்சியை ஏற்படுத்தும் மரபணுக்களுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது, எனவே, வேகவைத்த முட்டையுடன் உங்கள் காலையைத் தொடங்குங்கள். இது உடல் ஆரோக்கியத்திற்கும், எடை குறைப்புக்கும் உதவியாக இருக்கும்.
இறைச்சி மற்றும் மீன்
நீங்கள் எடை குறைக்க முயற்சிக்கும் போது புரத மூலங்களை சேர்க்க மறக்காதீர்கள். அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, அதிக புரதச்சத்து கொண்ட உணவு, குறிப்பாக கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவு, பசியைத் தூண்டும் கிரெலின் என்ற ஹார்மோனை அடக்குகிறது. இதனால் அடிக்கடி பசி எடுக்காது.
பச்சை காய்கறிகள்
பச்சை காய்கறிகளும் கீரை வகைகளும் தொப்பை கொழுப்பை எளிதில் கரைக்கும். இந்த பச்சைக் காய்கறிகளில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்து மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
சாக்லேட்
டார்க் சாக்லேட்டுகள் அனைவருக்கும் பிடித்தமானவை. ஆனால், இனிப்புகளை அதிகம் சாப்பிட்டால் உடல் எடை கூடும். எனவே சாக்லேட் சாப்பிடுவதற்கு தயங்குவோம்.
ஆனால் உண்மையில் டார்க் சாக்லேட்கள் உடல் எடையைக் குறைக்கவும் நல்லது என்பது உங்களுக்குத் தெரியுமா? டார்க் சாக்லேட் சாப்பிடுவது, அதிகமாக சாப்பிடும் ஆசையை அடக்கி, உடல் எடையை குறைக்க உதவுகிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ நியூஸ் இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR