Delta plus variant: உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க 5 வழிகள்

ஆக்ஸிஜன் பற்றக்குறையை உணவு மற்றும் பிற செயல்களின் மூலம் தீர்க்க வழி உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 27, 2021, 02:26 PM IST
Delta plus variant: உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க 5 வழிகள் title=

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையில் டெல்டா பிளஸ் வைரஸ் தமிழகத்தில் சூறையாட தொடங்கியது.

கொரோனா வைரஸ் தொற்றின் டெல்டா பிளஸ் (Delta Plus Variant) மாறுபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் இறந்ததாக தமிழக சுகாதாரத் துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் டெல்டா பிளஸ் மாறுபாடு காரணமாக பதிவான முதல் மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, தமிழகத்தில் டெல்டா பிளஸ் மாறுபாட்டால் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது. 

ALSO READ: Delta Plus Variant அறிகுறிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், சிகிச்சை: முழு விவரம்

இந்நிலையில் ஒவ்வொரு வகை கொரோனா உருமாற்றமும் ஒவ்வொரு வகை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்டா வகையால் 2வது அலை ஏற்பட்டது. அந்த வகை வைரஸ், நோயாளிகளின் ஆக்சிஜன் தேவையை அதிகரித்தது. எனவே ஆக்ஸிஜன் பற்றக்குறையை உணவு மற்றும் பிற செயல்களின் மூலம் தீர்க்க வழி உள்ளது.

* அர்கா பனை, பனை ஓலை, மணி பிளாண்ட், ஜெர்பரா டெய்ஸி அல்லது சீன பசுமையான தாவரங்களை வீடுகளில் வைத்திருப்பதன் மாலம், உங்கள் வீட்டில் உள்ள ஆக்ஸிஜனை இயற்கையாகவே அதிகாரிக்க வாய்ப்பு உள்ளது.

* உப்பு விளக்குகள், தேன் மெழுகுவர்த்திகள், அமைதி லில்லி மற்றும் மூங்கில் கரி போன்ற இயற்கை காற்று சுத்திகரிப்புகளைச் சேர்க்க முயற்சிக்கவும்.

* அமைதியாக இருப்பது சிஓபிடியால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உதவும். நீங்கள் அமைதியாக இருக்கும்போது, உங்களின் ​​ஆழ்ந்த சுவாசம் எளிதாகிறது, மன அழுத்த அளவு குறைகிறது மற்றும் உங்கள் ஆக்ஸிஜன் அளவு மேம்படும் வாய்ப்புகள் அதிகம். 

* கீரை, பெல் பெப்பர்ஸ், உருளைக்கிழங்கு, கேரட் மற்றும் பச்சை பீன்ஸ் போன்ற புதிய, வேகவைத்த காய்கறிகளை சாப்பிட முயற்சிக்கவும்.

* மிளகுக்கீரை, ஆர்கனோ மற்றும் மஞ்சள் போன்ற மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருள்களை சேர்த்துக்கொள்ள முயற்சிக்கவும், இவை அனைத்தும் உங்கள் நுரையீரலுக்கு உதவும் மூலிகைகள். உங்கள் நுரையீரல் மிகவும் எளிதாக சுவாசிக்கும்போது, நீங்கள் ஆக்ஸிஜன் அளவை மேம்படுத்தும்.

ALSO READ: TN Delta Plus Corona: தமிழகத்தில் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9ஆக உயர்வு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News