நீரிழிவு நோய்க்கு தேநீர் மருந்து: உலகெங்கிலும் உள்ள பலர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, தினசை ஒரு கோப்பை தேநீர் குடிக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றுவதற்கு கவலைப்பட்டுக் கொண்டு இருக்கும் சமயத்தில், அவர்களுக்காக வந்துள்ள நல்ல செய்தி இது. தேநீர், அதிலும் டார்க் டீ (Dark Tea) குடிப்பது நீரிழிவு அபாயத்தைக் குறைக்கும் ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
தினசரி டார்க் டீ குடிப்பது இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு உதவுவதாக, ஹாம்பர்க்கில் நடந்த நீரிழிவு ஆய்வுக்கான ஐரோப்பிய சங்கத்தின் (EASD) இந்த ஆண்டு வருடாந்திர கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டார்க் டீ (Dark Tea) கறுப்பு தேநீர் என்ன வேறுபாடு?
தேநீரில் பல வகைகள் உள்ளன. கறுப்பு தேநீர் என்பது, பால் சேர்க்காத டீயை குறிக்கிறது. டார்க் டீ என்பது அது அல்ல. டார்க் டீ என்பது நுண்ணுயிர் நொதித்தலுக்கு உட்பட்ட ஒரு வகையான முழு ஆக்ஸிஜனேற்ற தேநீர் ஆகும். இந்த தேநீர் இலைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டு நிறத்தை மாற்றுவதால் இது 'டார்க்' டீ என்று அழைக்கப்படுகிறது. ஒரு சீனாவின் இருந்து Pu-erh வகை தேநீர் ஆகும்.
டார்க் டீ கருப்பு தேநீரில் இருந்து வேறுபட்டது. பிளாக் டீ அதிக ஆக்ஸிஜனேற்றம் கொண்டது, சிறிது புளிக்கவைக்கப்படுகிறது. தேநீர் அருந்தாதவர்களுடன் ஒப்பிடும்போது, தினசரி டார்க் டீயை உட்கொள்பவர்களுக்கு முன் நீரிழிவு நோய்க்கான ஆபத்து 53% குறைவாகவும், வகை 2 நீரிழிவுக்கான ஆபத்தை 47% குறைக்கவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மேலும் படிக்க | வெந்தயம்: நீரிழிவு முதல் எடை இழப்பு வரை.. வேற லெவல் வீட்டு வைத்தியம்
வயது, பாலினம், இனம் மற்றும் உடல் நிறை குறியீட்டெண் (body mass index (BMI)) போன்ற நீரிழிவு ஆபத்து காரணிகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
நீரிழிவு நோயாளிகள் டார்க் டீயை இப்படி குடித்தால் சர்க்கரை அளவு சீராகும்
சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பவர்கள், டார்க் தேநீரில் சர்க்கரை அல்லது இனிப்பு சேர்க்காமல் இருப்பது முக்கியம். மீறி, அவர்கள் சர்க்கரை சேர்த்து டார்க் டீ குடித்தால், நீரிழிவு நோயில் இருந்து நிவாரணம் கிடைக்காது.
நீரிழிவு - டார்க் டீ ஆய்வு
இந்த டார்க் டீ ஆய்வில், 1,923 பேர் கலந்துக் கொண்டனர். அதில் 436 பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், 352 பேருக்கு நீரிழிவு நோய் இருந்தது. எஞ்சிய 1,135 பேர் சாதாரண இரத்த குளுக்கோஸ் அளவைக் கொண்டிருந்தனர். இதில், தேநீர் அருந்தும் பழக்கம் இல்லாதவர்களு, தினசரி ஒரே ஒரு முறை தேநீர் மட்டுமே குடிப்பவர்கள் இடம் பெற்றிருந்தார்கள்.
நுகர்வு அதிர்வெண், சிறுநீரில் குளுக்கோஸ் வெளியேற்றம், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் கிளைசெமிக் நிலை ஆகிய இரண்டிற்கும் இடையிலான தொடர்பை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தபோது இந்த ஆச்சரியமான முடிவு கிடைத்ததாக தெரியவந்துள்ளது.
நீரிழிவு அபாயத்தைக் குறைக்க உதவும் டார்க் டீ எப்படி செயல்படுகிறது தெரியுமா? இது இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்துகிறது, எனவே உங்கள் உடல் உங்கள் இரத்த சர்க்கரையை சிறப்பாக கட்டுப்படுத்த முடியும். அடுத்து, சிறுநீரில் குளுக்கோஸ் வெளியேற்றத்தை அதிகரிக்க உதவுவதால், இரத்த சர்க்கரை குறைவாக உள்ளது.
டார்க் டீ குடித்தாலும் உணவு கட்டுப்பாடு இருந்தால், சர்க்கரை அளவு சீராக இருக்கும். அதேபோல, வெள்ளை ரொட்டி மற்றும் பாஸ்தா போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் உட்பட ஒட்டுமொத்த சர்க்கரை உட்கொள்ளலைக் குறைப்பது முக்கியம்.
அனைத்து வகையான தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் கட்டுப்படுத்த முயற்சிக்கவும். கொழுப்பு, சர்க்கரை, உப்பு அதிகம் இருக்கும் உணவுகள், உடலில் வீக்கத்தை அதிகரிக்கும். காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற இயற்கை மற்றும் முழு உணவுகளை உண்ணுங்கள்.
நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு கலவைகள் அதிகம் உள்ள உணவுகள் மற்றும் நிறைய தண்ணீர் குடிக்கவும்.
மேலும் படிக்க | 30 நாள் நோ சுகர் டயட்: நம்ப முடியாத நன்மைகள்.. ட்ரை பண்ணி பாருங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ