முகத்தை சோப்பு போட்டு கழுவுவீர்களா? இந்த ஆபத்துகள் வரலாம்!

பலரும் விலை மலிவானதாகவும், எளிதானதாகவும் கிடைக்கும் சோப்பை பயன்படுத்தி முகம் கழுவுகின்றனர், ஆனால் சோப்பிலுள்ள ரசாயனங்கள் முகத்திற்கு கேடு விளைவிக்கும்.  

Written by - RK Spark | Last Updated : Apr 2, 2023, 10:29 AM IST
  • முகம் கழுவுதல் என்பது நமது அன்றாட சரும பராமரிப்பின் ஒரு முக்கியமான பகுதியாகும்.
  • முகத்தை சோப்பினால் கழுவும்போது துளைகள் அடைபட்டு முகப்பரு மற்றும் வெடிப்புகள் ஏற்படும்.
  • சோப்பு பயன்படுத்துவதால் முகத்தின் பிஹெச் சமநிலையில் பாதிப்பு ஏற்படும்.
முகத்தை சோப்பு போட்டு கழுவுவீர்களா? இந்த ஆபத்துகள் வரலாம்! title=

முகம் கழுவுதல் என்பது நமது அன்றாட சரும பராமரிப்பின் ஒரு முக்கியமான பகுதியாகும்.  முகத்தை கழுவுவதால் சருமத்தில் உள்ள அழுக்கு, எண்ணெய் மற்றும் மாசுகளை நீக்கி, சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.  பலரும் சோப்பை பயன்படுத்தி முகத்தை கழுவுகின்றனர், ஆனால் சோப்பு பயன்படுத்தி முகம் கழுவுவது முக சருமத்திற்கு நல்லதல்ல.  சோப்பு உங்கள் முகத்தைச் சுத்தப்படுத்த எளிய மற்றும் மலிவான வழியாகத் தோன்றினாலும் உங்கள் சருமத்திற்கு சிறந்த தீர்வுகளை இது கொடுக்காது.  

மேலும் படிக்க | கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? வீட்டிலேயே செய்யக்கூடிய சூப்பர் உணவுகள்!

முகத்தை சோப்பினால் கழுவும்போது முகத்திலுள்ள துளைகள் அடைபட்டு முகப்பரு மற்றும் வெடிப்புகள்  ஏற்படும்.  ஏனென்றால் சோப்பு முகத்தில் உள்ள எண்ணெய், அழுக்கு மற்றும் சில கிருமிகளை முழுவதுமாக நீக்காமல் அப்படியே விட்டு செல்கிறது.  இதன் விளைவாக முகத்தில் கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள் மற்றும் பருக்கள் போன்றவை ஏற்படும்.  பெரும்பாலான சோப்புகளில் கடுமையான ரசாயனங்கள் உள்ளன, அவை உங்கள் சருமத்திலுள்ள இயற்கையான எண்ணெய்களை குறைக்கலாம்.  முகத்திலுள்ள எண்ணெய் பசை குறைவதால் வறட்சி, தோல் உதிர்தல் மற்றும் எரிச்சல் போன்றவை ஏற்படும்.  குறிப்பாக சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்களுக்கு தோலில் தடிப்பு அல்லது அலர்ஜி போன்றவை ஏற்படும்.

பொதுவாக நமது சருமத்தில் பிஹெச் அமிலமானது 4.5 முதல் 5.5 வரை இருக்கும், மறுபுறம் பிஹெச் காரத்தன்மை 9-10 வரை இருக்கும்.  உங்கள் முகத்தை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவதால் உங்கள் முகத்திலுள்ள பிஹெச் அளவில் பாதிப்பு ஏற்படும்.  இதனால் முகத்தில் பருக்கள், எரிச்சல் போன்றவை ஏற்படும்.  சோப்பில் உள்ள ரசாயனங்கள் விரைவில் முதுமைத்தன்மையை ஏற்படுத்தலாம்.  இது உங்கள் சருமத்தை மந்தமாகவும், வறண்டதாகவும், சுருக்கமாகவும் தோற்றமளிக்க செய்கிறது.  சில சோப்புகளில் வாசனைக்காக சேர்க்கப்படும் ரசாயனங்கள் சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும்.  கற்றாழை, சாமந்தி மற்றும் கிரீன் டீ கலந்த சோப்புகளை உங்கள் சருமத்திற்கு பயன்படுத்துவது நல்லது.

மேலும் படிக்க | கண்ணுக்கு நல்லதுன்னு Vitamin A கண்டபடி சாப்பிடாதீங்க.. பேராபத்து!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News