JULY 30: உலக அளவில் கொரோனா பாதிப்பு அண்மை நிலவரம்

கொரோனா பெருந்தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,67,47,268 ஆக அதிகரித்தது. இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,60,593 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97,60,015 ஆக அதிகரித்துவிட்டது...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 30, 2020, 05:10 AM IST
  • உலகளவில் கொரோனா பாதிப்பு 1,67,47,268
  • உலகளவில் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,60,593
  • உலகளவில் கொரோனாவுகு சிகிச்சைப் பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97,60,015
JULY 30: உலக அளவில் கொரோனா பாதிப்பு அண்மை நிலவரம் title=

புதுடெல்லி: கொரோனா பெருந்தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,67,47,268 ஆக அதிகரித்தது. இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,60,593 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97,60,015 ஆக அதிகரித்துவிட்டது.  

இந்தியாவில் இதுவரை மொத்தமாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,31,669 ஆகவும், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 9,88,029 ஆகவும், பலி எண்ணிக்கை 34,193 ஆகவும் உயர்ந்துவிட்டது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 6,426 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது... மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 2,34,114 ஆக அதிகரித்துவிட்டது! குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,72,883 ஆகவும், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,741 ஆக உயர்ந்துள்ளது.
 வெளியே செல்லும்போது அபாயங்களைக் குறைக்கவும் COVID-19 பரவுவதைத் தடுக்கவும் அனைவரும் விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பிறரை சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதிகக் காற்றோட்டமுள்ள வெளிப்புற இடங்கள் அல்லது திறந்த நிலை இடங்களைத் தேர்வு செய்யவும். மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பான தூரத்தில் விலகி இருங்கள் வெளியே பொது இடங்களுக்குச் செல்வது பற்றிய உள்ளூர் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்...corona world update
கொரோனாவுக்கான தமிழக அரசின் பிரத்யேக தொலைபேசி உதவி எண்கள்: 1800 120 555550; 044 – 29510400, 044 – 29510500; 044 – 24300300, 044 – 46274446; 9444340496, 8754448477..

Read Also | COVID-19 நோயாளிகளுக்கான சிகிச்சையில் Favivir என்னும் மாத்திரை பலனளிக்குமா..!!!

ஃபுளோரிடாவில் வரலாறு காணாத அளவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் பலர் உயிரிழந்துள்ளனர்...
சீனாவின் மெயின்லாண்டில் கடந்த மூன்று மாதங்களில் நேற்று  ஒரே நாளில் COVID-19 நோய்த்தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது... 
செளதி அரேபியாவில் கடும் கட்டுப்பாடுகளுடன் ஹஜ் யாத்திரை தொடங்கியது...
ஈகுவடார் தலைநகர் குயிட்டோவில் மருத்துவமனைகள் நிரம்பியதால், நடமாடும் பரிசோதனை மையங்கள் திறக்கப்பட்டன...

கொரோனா நோய்த்தொற்று பாதிப்பின் அடிப்படையில் வெளியிடப்படும் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் முதல் பத்து நாடுகள்:
1. அமெரிக்கா - 43,51,997
2. பிரேசில் - 24,83,191
3. இந்தியா - 14,83,156
4. ரஷ்யா - 8,22,060
5. தென்னாப்பிரிக்கா - 4,59,761
6. மெக்சிகோ - 4,02,697
7. பெரு - 3,89,717
8. சிலி - 3,49,800
9. இங்கிலாந்து - 3,02,261
10. இரான் - 2,96,273

உலக சுகாதார அமைப்பு, நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையங்கள் மற்றும் உள்ளூர் சுகாதார அமைப்புகளிடமிருந்து COVID-19 பற்றிய தரவை JHU என்னும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து இந்தத் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன.

Trending News