புதுடெல்லி: உலக சுகாதார அமைப்பு, நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையங்கள் மற்றும் உள்ளூர் சுகாதார அமைப்புகளிடமிருந்து COVID-19 பற்றிய தரவை JHU எனப்படும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் சேகரிக்கிறது.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,20,51,561. உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,49,735 என்றும், உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 65,98,230.
இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,93,802 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,95,513 ஆகவும், பலி எண்ணிக்கை 21,604 ஆகவும் உயர்ந்துவிட்டது.
இந்தியாவில் நேற்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 2,83,659.
Also Read | இன்று மட்டும் நாட்டில் 21,604 பேருக்கு கொரோனா தொற்று; 475 பேர் மரணம்!!
கொரோனா தொடர்பான தகவல்களை தெரிந்துக் கொள்ள +91-11-23978046 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கவும். இலவச தொலைபேசி எண் (Toll Free) 1075. உதவி பெறுவதற்கான மின்னஞ்சல் முகவரி (Helpline Email ID) : ncov2019@gov.in
COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை அமெரிக்காவில் மட்டும் 3 மில்லியனைத் தாண்டியுள்ளது
COVID-19 நோய்த்தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளை விட பட்டினியால் அதிக உயிரிழப்புகள் ஏற்படும் எனஆக்ஸ்போம் தொண்டு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மெல்போர்னில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருப்பதால் ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டது.
டோக்கியோவில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் COVID-19 நோய்த்தொற்று பாதிப்பு உச்சத்துக்குச் சென்றது.
Also Read | எச்சரிக்கை!! COVID-19 ஐ விட கொடிய நோய் "Unknown Pneumonia" 600-க்கும் அதிகமானோர் இறப்பு
கொரோனா நோய்த்தொற்று தாக்கம் கொண்ட முதல் பத்து நாடுகளின் பட்டியல்:
1. அமெரிக்கா - 31,17,946
2. பிரேசில் - 17,55,779
3. இந்தியா - 7,93,802
4. ரஷ்யா - 7,06,240
5. பெரு - 3,16,448
6. சிலி - 3,06,216
7. இங்கிலாந்து - 2,89,154
8. மெக்சிகோ - 2,82,283
9. ஸ்பெயின் - 2,53,056
10. இரான் - 2,50,458