ஆரோக்கியமானதாக நம்பப்படும் ஆரோக்கியமற்ற உணவுகள்: மாற்றி யோசிக்க வைக்கும் உண்மைகள்

Health Myths: ஆரோக்கியமானது என நாம் நம்பும் உணவுகளில் பல உண்மையில் ஆரோக்கியத்திற்கு எதிரானவை என்பது ஆச்சரியம் அளிக்கும் விஷயமாக இருந்தாலும் ஆபத்தானது என்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 24, 2022, 07:25 AM IST
  • தயிரை இப்படி சாப்பிட்டால் நல்லது இல்லை
  • எந்த எண்ணெய் ஆரோக்கியத்தைக் கெடுக்கும்?
  • ஆரோக்கியம் தொடர்பான கட்டுக்கதைகள்
ஆரோக்கியமானதாக நம்பப்படும் ஆரோக்கியமற்ற உணவுகள்: மாற்றி யோசிக்க வைக்கும் உண்மைகள் title=

Unhealthy Foods Myths: நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் வெற்று கலோரிகள் அல்லது பொருட்களை உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது என்று நாம் நினைக்கிறோம், அது நமது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால், உணவு தொடர்பான பல தவறான நம்பிக்கைகளும் கட்டுக்கதைகளும் இருக்கின்றன.  ஆரோக்கியமானது என நாம் நம்பும் உணவுகளில் பல உண்மையில் ஆரோக்கியத்திற்கு எதிரானவை என்பது ஆச்சரியம் அளிக்கும் விஷயமாக இருந்தாலும் ஆபத்தானது என்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது.

விருது பெற்ற ஊட்டச்சத்து நிபுணரான டாக்டர் லோவ்னீத் பாத்ரா, ஆரோக்கியமானதாகத் தோன்றினாலும் முற்றிலும் ஆரோக்கியமற்ற 5 உணவுகளைப் பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். "ஜாக்கிரதை: அது ஆரோக்கியமாக இருப்பதாகத் தோன்றுவதால் உண்மையில் ஆரோக்கியத்தைக் கொடுப்பவை என்று அர்த்தமல்ல!" என்று கூறுகிறார். 

மேலும் படிக்க | அதிகரிக்கும் எடையை குறைக்க இந்த ஒரு பொருள் போதும்

ஆரோக்கியமானதாகத் தோன்றினாலும் முற்றிலும் ஆரோக்கியமற்ற 5 உணவுகள்
சுவையூட்டப்பட்ட தயிர்: தயிர் ஆரோக்கியமான தேர்வாக இருக்கலாம், ஆனால் சுவையூட்டப்பட்ட தயிரில் சர்க்கரை உள்ளது. அதிலும், பல சுவையூட்டப்பட்ட தயிர்களில் ஒரு கேக்கில் இருப்பதைவிட அதிக அளவில் சர்க்கரை உள்ளது. எனவே, முடிந்தவரை சாதாரணமான தயிரையே உண்ணவும்.  

புரோட்டின் பானங்கள் மற்றும் பார்கள்: ஒரு உணவு அல்லது பானத்தில் அதிக புரத உள்ளடக்கம் இருந்தால், அது ஆரோக்கியமானது என்ற எண்ணம் உள்ளது. இருப்பினும், புரோட்டின் பார்கள் மற்றும் ஷேக்குகள் ஆரோக்கியமானதா என்பது சந்தேகமே. அதிகப்படியான புரோட்டீன் பார்கள்/பானங்கள் செயற்கை பொருட்கள் மற்றும் கலப்படங்களின் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் இருப்பதால், அவை புரதச்சத்தின் நன்மைகளை குறைத்துவிடும்.

பேக்கேஜ் செய்யப்பட்ட சாலட்: சாலட் ஒரு ஆரோக்கியமான மற்றும் நிறைவான உணவு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் ரெடி-டு ஈட் சாலட்களில் அதிக அளவு சோடியம் மற்றும் கொழுப்புச் சத்துக்கள் உள்ளன. அதோடு, சாலட் கெட்டுப் போகாமல் இருக்க பதப்படுத்தும் பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பதால், சாலட் கொடுக்கும் பலன், கடையில் வாங்கும் சாலடுகளில் இருப்பதில்லை.

மேலும் படிக்க | ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிடுவது நல்லது

காய்கறி எண்ணெய்கள்: கனோலா, சூரியகாந்தி, சோயாபீன் போன்ற காய்கறி எண்ணெய்கள் பெரும்பாலும் "இதயத்திற்கு ஆரோக்கியமானது" என்று விளம்பரப்படுத்தப்படுகின்றன. ஆனால் உண்மை என்னவென்றால், அவை மிகவும் சுத்திகரிக்கப்பட்டதாகவு, ஒமேகா 6 நிறைந்துள்ளதாகவும் இருப்பதால் இன்று ஏற்படும் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு முதல் காரணமாக இருக்கிறது. இதனால், புற்றுநோய் செல்களின் வளர்ச்சி துரிதப்படுத்தப்படுகிறது. இரத்த உறைவு மற்றும் உடலில் வீக்கத்தை அதிகரிப்பதிலும் காய்கறி எண்ணெய்கள் அதிகரிக்கின்றன.
 
கொழுப்பு குறைவாக உள்ள பொருட்கள்: ஒரு உணவில் கொழுப்பு குறைவாக இருப்பதால் அது ஆரோக்கியமான தேர்வு என்று அர்த்தமல்ல. உணவு உற்பத்தியாளர்கள் பெரும்பாலும் சுவை இழப்பை ஈடுசெய்ய குறைந்த கொழுப்பு மற்றும் கொழுப்பு இல்லாத பொருட்களில் சர்க்கரை சேர்க்கின்றனர். எனவே நீங்கள் நம்பும் நன்மைகள், உங்களுடைய உணவுத் தேர்வில் இருப்பதில்லை. 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உங்கள் எலும்புகளில் வலுவில்லையா? காரணம் இதுதான், இப்படி சரி செய்யுங்கள்  

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News