Morning Health Tips : ஆண்கள், பெண்களுக்கு நன்மை தரும் ஊறவைத்த உலர் திராட்சை

காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த உலர் திராட்சையை சாப்பிட்டால் உடலில் இருக்கும் இரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 9, 2021, 09:45 AM IST
  • உங்கள் மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்க உலர் திராட்சை
  • திராட்சை ஆண்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்
  • உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு திராட்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
Morning Health Tips : ஆண்கள், பெண்களுக்கு நன்மை தரும் ஊறவைத்த உலர் திராட்சை title=

உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் கோல்டன் என மூன்று நிறங்களில் உண்டு. பொதுவாக உலர் திராட்சையில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் உண்டு.

அதிலும் இந்த உலர் திராட்சைகளை நாம் நீரில் ஊற வைத்து சாப்பிட்டால், பல ஆரோக்கிய நன்மைகள் மற்றும் உடல் பிரச்சனைகளைத் தடுக்கலாம். எனவே நீரில் ஊற வைத்த உலர் திராட்சையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று இங்கே பார்ப்போம்.

ALSO READ | Moong Dal Benefits: ஆரோக்கிய நன்மைகளை அளித்தரும் பாசிப் பயறு

* ரத்த சோகை: ரத்த சோகை உள்ளவர்கள், இதனை தினமும் ஸ்நாக்ஸாக சாப்பிட்டு வந்தாலோ அல்லது இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து உலர் திராட்சையை உட்கொண்டு வந்தாலோ, இரத்தணுக்களின் அளவை அதிகரிக்கலாம். 

* ஆண்கள் விறைப்புத்தன்மை குறைபாட்டை போக்கும்: ஆண்கள் விறைப்புத்தன்மை குறைபாட்டினால் கஷ்டப்பட்டால், தினமும் உலர் திராட்சையை ஒரு கையளவு உட்கொண்டு வந்தால், இப்பிரச்சனை நீங்கும்.

* மாதவிடாய் பிரச்சனைகள் தீரும்: மாதவிடாய் காலத்தில் வயிற்றுப் பிடிப்பு மற்றும் அதிப்படியான இரத்தப்போக்கினால் கஷ்டப்படுவார்கள். அவர்கள், தினமும் ஊற வைத்த உலர் திராட்சையை நீருடன் எடுத்து வந்தால், மாதவிடாய் பிரச்சனைகளில் இருந்து விரைவில் விடுபடலாம்

* மலச்சிக்கல் தீரும்: மலச்சிக்கல் உள்ளவர்கள் ஒரு கப் நீரில் 20-25 உலர் திராட்சையைப் போட்டு கொதிக்க விட்டு இறக்கி, மசித்து, அதில் தேன் கலந்து, தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால், மலச்சிக்கலில் இருந்து விரைவில் விடுபடலாம். 

* உடல் சூடு தணியும்: உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், ஒரு லிட்டர் தண்ணீரில் 25 உலர் திராட்சையை (Raisin) சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, நாள் முழுவதும் அந்த நீரைக் குடித்து, உலர் திராட்சையை உட்கொண்டு வந்தால், விரைவில் உடல் வெப்பம் தணியும்.

ALSO READ | பொடுகு தொல்லையால் அவதியா? எளிய தீர்வுகள் இதோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News