கூந்தல் பராமரிப்புக்கான வீட்டு வைத்தியம்: இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் கூந்தலால் மிகவும் சிரமப்படுகின்றனர். விரைவான முடி உதிர்தல், நரைத்தல் மற்றும் முடியின் உயிரற்ற தன்மை ஆகியவற்றுடன் அதிகளவு சிரமப்படுகின்றனர். நீங்களும் இதே போன்ற பிரச்சனையுடன் போராடுகிறீர்கள் என்றால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை ட்ரை செய்து பாருங்கள், இவை உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாகவும், கருப்பாகவும், நீளமாகவும், அடர்த்தியாகவும் மாற்ற உதவும், அதுவும் ஒரு பைசா கூட செலவு செய்யாமல். அதுமட்டுமின்றி இந்த வைத்தியம் உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இதனுடன், முடி உதிர்வதைக் குறைப்பதற்கும், கருமையாக்குவதற்கும், நீளமாக்குவதற்கும் இது உதவும். எனவே இந்த வீட்டு வைத்தியத்தை ஒரு முறை முயற்சித்த பிறகு, உங்கள் ரகசியத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள்.
இந்நிலையில் இன்று நாம் கற்றாழை பற்றி தான் வீட்டு வைத்திய குறிப்பில் காண உள்ளோம். இது நம் தலைமுடிக்கு எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் நீங்கள் இதை சரியாகப் பயன்படுத்தினால் மட்டுமே, உங்கள் தலைமுடிக்கு நீங்கள் பெற விரும்பும் பலனை பெற முடியும். அத்துடன் உங்கள் கூந்தலில் ஏற்பட்டிருக்கும் பல பிரச்சனைகளை நீக்குவதற்கும் இது உதவும். எனவே உங்கள் தலைமுடி தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும் வகையில் கற்றாழையை முடியில் தடவுவதற்கான சரியான வழியை இப்போது தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | உடல் எடையை வேகமா குறைக்கணுமா? பப்பாளியை இப்படி சாப்பிட்டு பாருங்க
கற்றாழையை முடியில் எப்படி தடவுவது | How To Apply Aloe Vera on Hair
* கற்றாழை ஹேர் மாஸ்க் உங்கள் கூந்தலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த ஹேர் மாஸ்கை உருவாக்க, முதலில் கற்றாழை ஜெல்லை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். இப்போது அதில் கிளிசரின் கலக்கவும். இந்த இரண்டையும் மிக்ஸியில் போட்டு நன்றாக பேஸ்ட் செய்யவும். இப்போது இந்த பேஸ்ட்டை ஒரு கிண்ணத்தில் எடுத்து, காட்டனின் உதவியுடன் உங்கள் உச்சந்தலையில் மற்றும் முடியின் முனைகளில் நன்கு தடவவும். உங்கள் தலைமுடியைக் கழுவுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் இந்த ஹேர் மாஸ்கை உங்கள் தலைமுடியில் தடவவும், பின்னர் உங்கள் தலைமுடியை லேசான ஷாம்பு கொண்டு கழுவவும். இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தினால், உங்கள் தலைமுடியை வலுவாகவும், கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
* இந்த ஹேர் மாஸ்கை உருவாக்க, உங்களுக்கு இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் தேவைப்படும். ஒரு சிறிய கிண்ணத்தில் நன்கு கலந்து, பின்னர் அதை முடி முழுவதும் தடவவும். தடவி ஒரு மணி நேரம் கழித்து உங்கள் தலைமுடியை நன்கு கழுவ வேண்டும். இது கூந்தலை மென்மையாக்குவது மட்டுமின்றி பொலிவையும் அதிகரிக்கும்.
* கற்றாழையில் எலுமிச்சை சாறு கலந்து ஹேர் மாஸ்க் செய்யலாம், பொடுகுத் தொல்லை நீங்கி, கூந்தலுக்கு பொலிவு தரும். இந்த ஹேர் மாஸ்க் முடியின் ஒட்டும் தன்மையையும் நீக்குகிறது. இந்த ஹேர் மாஸ்க்கிற்கு, 3 முதல் 4 ஸ்பூன் கற்றாழை ஜெல்லில் சில துளிகள் எலுமிச்சை சாற்றை கலக்கவும். இதனை தலையில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பின் ஷாம்பு கொண்டு தலையை அலசவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | வைரல் காய்ச்சலுக்கு பூச்சாண்டி காட்டும் கிச்சன் கில்லாடி மசாலாக்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ