உடலின் நச்சுக்களை அகற்ற வேண்டுமா... வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய ‘சில’ பானங்கள்!

உடலில் சேர்ந்துள்ள நச்சுத்தன்மையையும் அழுக்கையும் நீக்குவது, அதாவது டீடாக்ஸ் செய்வது மிகவும் முக்கியமானது. உடலில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய, பலவிதமான ஆரோக்கியமான உணவுகளையும் பானங்களையும் எடுத்துக் கொள்வது குறித்து வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 18, 2023, 06:11 PM IST
  • உடல் பருமன், வயிற்றுப் பிரச்சினைகள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உண்டாகும்.
  • உடலில் பல வகையான நச்சுகள் சேரத் தொடங்குகின்றன.
  • பல வகை உடல் பிரச்சனைகளுக்கு மூல காரணமாக அமைந்து விடுகிறது.
உடலின் நச்சுக்களை அகற்ற வேண்டுமா... வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய ‘சில’ பானங்கள்! title=

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப்பழக்கத்தால்,  உடலில் பல வகையான நச்சுகள் சேரத் தொடங்குகின்றன. இது பல வகை உடல் பிரச்சனைகளுக்கு மூல காரணமாக அமைந்து விடுகிறது. உடல் பருமன், வயிற்றுப் பிரச்சினைகள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை இதில் அடங்கும். இந்த பிரச்சனைகளைத் தவிர்க்க உடலில் சேர்ந்துள்ள நச்சுத்தன்மையையும் அழுக்கையும் நீக்குவது, அதாவது டீடாக்ஸ் செய்வது மிகவும் முக்கியமானது. உடலில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய, பலவிதமான ஆரோக்கியமான உணவுகளையும் பானங்களையும் எடுத்துக் கொள்வது குறித்து வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். 

உடலில் உள்ள அழுக்குகளை அகற்ற,  சில பானங்களை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால்,  சிறந்த பலன் கிடைக்கும். இவை உடலில் தேங்கியுள்ள அழுக்குகளையும் நச்சுக்களையும் வெளியேற்றுவதில் உடனடி பலன் கிடைக்கும். அதோடு உடல்  எடையையும் குறைக்கலாம்.

இஞ்சி தேன் கலந்த பானம்

இஞ்சியை நன்றாகஅரைத்துச் சாறு எடுத்து வெறும் வயிற்றில் குடித்தால், குடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் வெளியேறும். சிலர்  காலையில் அருந்தும் டீயில் இஞ்சி சேர்த்து அருந்துவார்கள். அதுவும் உடலைச் சுத்தமாக்கும். இஞ்சியை நீர் சேர்த்து, காய்ச்சி வடிகட்டி, தேன்  கலந்து குடித்தால் கல்லீரலில் கழிவுகள் சேராமலிருக்கும். 

புதினா - வெள்ளரி பானம் 

புதினா மற்றும் வெள்ளரிக்காய் பானம் உங்கள் உடலில் சேரும் அழுக்குகளையும் சுத்தம் செய்கிறது. வெள்ளரிக்காயில் 90 சதவீதம் தண்ணீர் உள்ளது. கோடை காலத்தில்,  நீண்ட நேரம் உடலின் நீர் சத்து குறையாமல் வைத்திருக்கும். மறுபுறம், புதினா இலைகளில் பல வகையான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. பொதுவாகவே, இந்த பானம் உங்களுக்கு மிகவும் ஆரோக்கியமானது.  புதினாவை நன்றாக நறுக்கி வெதுவெதுபான தண்ணீரில் சேர்க்கவும், அதில் துருவிய வெள்ளரிக்காயையும் சேர்க்கவும். சிறிது நேரம் கழித்து வடிக்கட்டி குடிக்க வேண்டும்.

நெல்லிகாய் - இஞ்சி பானம்

முழு நெல்லிக்காயுடன் சிறு துண்டு இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைத்து, அதில் எலுமிச்சைச் சாறு பிழிந்து, வடிகட்டி, தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் மலக்கழிவுகள் வெளியேறும். வயிறு சுத்தமாக ஆவதோடு, பிற நச்சுக்களும் வெளியேறும்.

மேலும் படிக்க | எச்சரிக்கை! மன ஆரோக்கியத்தை பாதிக்கும் ‘துத்தநாக’ குறைப்பாடு!

கேரட் எலுமிச்சை பானம்

கேரட்டுடன் சிறு துண்டு இஞ்சி, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து அரைத்து, எலுமிச்சைச் சாறு சேர்த்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்ட வேண்டும். அதனுடன் சிறிது நீர் அல்லது தேங்காய்ப்பால் சேர்த்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். இதனை வாரம் ஒருநாள்  குடித்தாலே போதும். உடலில் தங்கியிருக்கும் நச்சுகள் வெளியேறும். 

இலவங்கப்பட்டை - தேன் கலந்த பானம்

இலவங்கப்பட்டை மற்றும் தேன் பானம் உடலில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பானம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.  இலவங்கபட்டையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை உடலின் அழுக்குகளை சுத்தம் செய்ய உதவுகின்றன. தேனில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன இவை இரண்டின் கலவையும் உங்கள் உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | முக அழகை கெடுக்கும் இரட்டை கன்னம்... சில ‘எளிய’ தீர்வுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News