இந்தியாவில் கோவிட் தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு அனுமதி கோரி பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் திங்களன்று இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்ததாக அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முன்னதாக அமெரிக்காவின் பைசர் நிறுவனம், த்தான் தயாரித்துள்ள தடுப்பூசி 95 சதவீதம் செயல்திறன் மிக்கது என பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதையடுத்து, இந்தியாவில் பயன்படுத்த அனுமதி கோரியது.
முன்னதாக பைசர் (Pfizer) நிறுவன தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு பிரிட்டன் மற்றும் பக்ரைன் நாடுகள் அனுமதி அளித்தது.
"பாரத் பயோடெக் இன்று தாங்கள் தயாரிக்கும் கோவேக்ஸின் (COVAXIN) தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி கோரி விண்ணப்பித்தது. எஸ்.இ.சி நிபுணர் குழு இந்த வாரத்திலேயே சீரம் மற்றும் ஃபைசரிடமிருந்து விண்ணப்பங்களுடன் இதனையும் ஆராயலாம், மேலும் இது குறித்த முடிவு இரண்டு வாரங்களில் எடுக்கப்படும், ”என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
சீரம்-ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஆகியோரால் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசியான கோவிஷீல்ட் (covishield) இந்தியாவில் தயாரிக்கப்பட்டு சோதனை செய்யப்படுகிறது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை (Coronavirus Vaccine) அவசரமாக பயன்படுத்த அனுமதி கோரிய முதல் இந்திய நிறுவனம் இதுவாகும்.
சீரம் இன்ஸ்டிடியூட்டின் தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டிஷ் நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா ஆகிய நிறுவனங்களால் உருவாக்கப்பட்டது. மேலும் புனேவை தளமாகக் கொண்ட நிறுவனம் இந்த தடுப்பூசிக்காக 1,600 பங்கேற்பாளர்களை கொண்ட மூன்றாம் கட்ட பரிசோதனையை மேற்கொண்டு வருகிறது, இது இந்தியா மற்றும் பிற குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாட்டிற்காக, மருந்துகளை தயாரிக்க ஒப்பந்தம் போட்டுள்ளது.
பாரத் பயோடெக்கின் தடுப்பூசி என்பது உள்நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் தடுப்பூசி ஆகும், இது அவசரகால விண்ணப்பத்தை கோரியுள்ளது.
Bharat Biotech தனது மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டு வருகிறது. இது நாட்டில் உள்ள சுமார் 12 இடங்களில் 26,000 பேர்களுக்கு தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்து வருகிறது.
3 ஆம் கட்ட சோதனைகளுக்கு நிறுவனம் சுமார் ₹ 150 கோடியை செலவிடுகிறது, மேலும் டிசம்பர் மாதத்திற்குள் செயல்படும் மேலும் ஒரு பரிசோதனை மையத்தை அமைப்பதற்காக மேலும் ரூ.120-150 கோடி செலவிடுகிறது.
ALSO READ | அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி கோரிய இந்தியாவின் முதல் COVID-19 தடுப்பூசி..
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR