இந்த சம்மருக்கு நீரிழிவு நோயாளிகள் தயக்கமின்றி குடிக்க 5 பானங்கள்

Drinks for diabetes: சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோடையில் அதிகளவில் தாகம் எடுக்கும். அத்தகைய சூழ்நிலையில், ஒரு நீரிழிவு நோயாளி தன்னை நீரேற்றமாக வைத்திருக்க ஆரோக்கியமான பானங்களைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 9, 2023, 05:32 PM IST
  • உங்களை நீரேற்றமாக வைத்திருக்க 5 சிறந்த பானங்கள்
  • தொடர்ந்து தண்ணீர் குடிக்கவும்
  • எலுமிச்சை சாறு
இந்த சம்மருக்கு நீரிழிவு நோயாளிகள் தயக்கமின்றி குடிக்க 5 பானங்கள் title=

நீரிழிவு நோயாளிகளுக்கான கோடைகால பானங்கள்: கோடைக்காலத்தில் பெரும்பாலானோரின் உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். நம் உடலில் போதிய அளவு தண்ணீர் இல்லை என்றால், பல பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும். கோடை காலத்தில் சர்க்கரை நோயாளிகளின் பிரச்னைகள் அதிகமாகும். அவர்கள் மீண்டும் மீண்டும் தாகமாக உணர்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், ஒரு நீரிழிவு நோயாளி தங்களை நீரேற்றமாக வைத்திருக்க ஆரோக்கியமான பானங்களைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். எனவே இந்த பதிவில் வெயிலை சமாளிக்கும் பானங்கள் குறித்து தெரிந்துக் கொளவோம்.

உங்களை நீரேற்றமாக வைத்திருக்க 5 சிறந்த பானங்கள்

தொடர்ந்து தண்ணீர் குடிக்கவும்

உடலுக்குத் தேவையானது தண்ணீர். எனவே, கோடை காலத்தில் தண்ணீர் தவறாமல் எடுக்க வேண்டும். முடிந்த அளவு தண்ணீர் குடிக்கவும். இதனால் உடலில் நீர்ச்சத்து குறையாது. எனவே தினமும் குறைந்தது 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இருப்பினும் நீரிழிவு நோயாளிகள் தண்ணீரின் அளவை அதிகரிப்பதற்கு முன் தங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.

மேலும் படிக்க | எடையை குறைக்க சூப்பர் வழி: இந்த பழங்களுக்கு கண்டிப்பா நோ சொல்லிடுங்க!

மோர் குடிக்கவும்

வெயில் காலத்தில் பானமாகவோ, உணவு மூலமாகவோ கட்டாயமாக எடுத்துக் கொள்ள வேண்டியது மோர் ஆகும். நம் உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு மட்டுமல்லாமல் செரிமானக் கட்டமைப்பை மேம்படுத்துகிறது. மலச்சிக்கலை தடுக்கிறது. உணவுக்குப் பிறகு ஒரு டம்ளர் மோர் அருந்துவது நல்ல பலனை தரும். புரதம் மற்றும் மாவுச்சத்து இணைந்த பானம் இது. மோரில் நல்ல பாக்டீரியா நிரம்பியிருக்கும்.கோடையில் வெப்பம் அதிகமாக இருக்கும். இதனால் பலர் விரைவில் சோர்வடைந்து விடுகிறார்கள்.

இளநீர் குடிக்கவும்

இயற்கையாகக் கிடைக்கும் பானங்களில் இளநீர் ஒன்று. இதில் 95 சதவீதம் தண்ணீர் உள்ளது. இதில் உள்ள சத்துக்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்க உதவுகிறது. தேங்காய் நீரில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. தேங்காய் நீர் சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது.

எலுமிச்சை சாறு குடிக்கவும்

கோடையில் எலுமிச்சை சாறு கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். சர்க்கரை இல்லாமல் சாப்பிடுவது நல்லது. எலுமிச்சை சாறு இரத்த சர்க்கரை அளவை பாதிக்காது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

புதினா ஜூஸ் குடிக்கவும்

இந்த புதினா ஜூஸ் கோடை வெப்பத்திலிருந்து காத்துக் கொள்ள நல்லது. இதில் சர்க்கரைகள் எதுவும் இல்லை என்பது சிறப்பு. இதனால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. செரிமானம் மேம்படும். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் இது ஒரு நல்ல பானம். புதினா இலைகள் சீரகம் மற்றும் இஞ்சி சேர்த்து இந்த பானத்தை செய்யலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க |  கலோரிகளை எரித்து உடல் பருமனை குறைக்கும் ‘ஆயுர்வேத பொடியை’ தயாரிக்கும் முறை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News