கர்நாடகா இடைத்தேர்தல் முடிவில் பெரும்பான்மை இடங்களில் பாரதீய ஜனதா முன்னிலை வகிக்கத் தொடங்கிய நிலையில், இடைத்தேர்தல்களில் தோல்வியை கட்சி ஏற்றுக்கொண்டதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடைப்பெற்ற அனைத்து 15 சட்டமன்றத் தொகுதிகளிலும் பாஜகவும் எதிர்க்கட்சியான காங்கிரசும் போட்டியிட்டன, அதே நேரத்தில் JD(S)12 இடங்களில் போட்டியிட்டது. தற்போதைய போக்குகளின்படி, காவி கட்சி 12 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலை நீடிக்கும் பட்சத்தில் கர்நாடகாவில் எடியூரப்பாவின் தலைமையிலான பாஜக ஆட்சி நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து காங்கிர் மூத்த தலைவர் சிவகுமார் தெரிவிக்கையில்., “இந்த 15 தொகுதிகளின் வாக்காளர்களின் கட்டளைக்கு நாங்கள் உடன்பட வேண்டும். குறைபாடுள்ளவர்களை மக்கள் ஏற்றுக்கொண்டனர். நாங்கள் தோல்வியை ஏற்றுக்கொண்டோம், நாங்கள் சோகமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் 15 தொகுதிகளில் இடைத்தேர்தல் கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெற்றது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை துவங்கி எண்ணப்பட்டு வருகிறது,
"காலை 8.00 மணிக்கு வாக்க எண்ணிக்கை தொடங்கிய இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, பாஜக 48.6 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 29.8 சதவீதத்தையும், JDS 17.2 சதவீத வாக்குகளையும் பதிவு செய்திருந்தது" இந்த நிலையில் கர்நாடகா மூத்த தலைவரின் கருத்து வெளியாகியுள்ளது.
223 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடகா சட்டமன்றத்தில் ஆளும் கட்சிக்கு எளிய பெரும்பான்மை பெற குறைந்தது ஏழு இடங்கள் தேவைப்படுவதால், இந்த தேர்தலில் பி.எஸ். எடியூரப்பா தலைமையிலான அரசாங்கம் கடும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
------------ கர்நாடகா தேர்தல் ------------
இந்த ஆண்டு துவக்கத்தில் காங்கிரஸ்-JD(S) கூட்டணியில் இருந்த 13 MLA-க்கள் தங்களது கிளர்ச்சின் பின் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். குறிப்பிடத்தக்க வகையில், காங்கிரஸ்-JD(S) கிளர்ச்சி MLA-க்களில் 17 பேரில் 15 பேர் பெங்களூரில் முதலமைச்சர் BS எடியூரப்பா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 MLA-க்களில், MDB நாகராஜ் ஏற்கனவே பாஜகவில் உறுப்பினராக உள்ளார், ரோஷன் பேக் பாஜகவில் சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத்தொடர்ந்து 17 கிளர்ச்சி காங்கிரஸ்-JD(S) MLA-க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற முடிவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. பின்னர் கிளர்ச்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த ஆண்டு ஜூலை மாதம் பதவி விலகல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் 2023-ஆம் ஆண்டில் முடிவடையும் தற்போதைய சட்டசபையின் காலத்திற்கு தேர்தலில் போட்டியிட சபாநாயகர் தடை விதித்திருந்தார்.
இதனையடுத்து அதிருப்தி அடைந்த MLA-க்கள் தங்களது தகுதிநீக்கத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடினர். சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிராக அவர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக நீதிமன்றத்தின் உதவியை நீடிய கிளர்ச்சி MLA-க்களுக்கு உதவும் வகையில், கிளர்ச்சி MLA-க்கள் தேர்தலில் போட்டியிடலாம் என உச்சநிதீமன்றம் அறிவித்தது. உச்சநீதிமன்றத்தின் அறிவிப்பினை அடுத்து நாளை நடைபெறும் இடைத்தேர்தலில் தகுகி நீக்கம் செய்யப்பட்ட MLA-க்கள் பாஜக சார்பில் போட்டியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் மற்றும் JDS-ல் இருந்து 17 MLA-க்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து BS எடியூரப்பா அரசாங்கத்திற்கு இந்த இடைத்தேர்தல் அவசியமானதாக பார்க்கப்படுகிறது. கர்நாடக சட்டசபையில் மொத்தம் 207 MLA-க்கள் உள்ளனர், அவர்களில் 104 பேர் பாஜக-வைச் சேர்ந்தவர்கள்.
தற்போது, காங்கிரஸில் 65 MLA-க்கள் உள்ளனர், JDS 34 MLA-க்களை கொண்டுள்ளனர். ஆக எதிர்க்கட்சியில் 99 MLA-க்கள் உள்ளனர். இந்த இரு கட்சிகளும் பாஜக-வை அதிகாரத்திலிருந்து விலக்கி வைக்க விரும்பினால் இடைத்தேர்தலில் உள்ள 15 இடங்களையும் வெல்ல வேண்டும். மாறாக பாஜக கனிசமான வெற்றி பெறும் பட்சத்தில் 2023 வரையிலும் பாஜக இடையூறு இன்றி பெரும்பான்மை ஆட்சியை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.