சென்னை: ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்ட மன்ற தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக போட்டியிடும் ஆறு தொகுதிகளுக்கான பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தமுறை மதிமுக (MDMK Candidates) வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுகின்றன.
மதிமுக போட்டியிடும் தொகுதிகளின் (MDMK Constituency List 2021):
1.சாத்தூர்
2.பல்லடம்
3.மதுரை தெற்கு
4.அரியலூர்
5.வாசுதேவநல்லூர் (தனி)
6.மதுராந்தகம் (தனி)
ALSO READ | DMK ALLIANCE Seat Sharing: மதிமுக 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டி
234 தொகுதிகள் கொண்ட தமிழ்நாட்டுக்கும், 30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரிக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். இந்த மாநிலங்களில் பதிவாகும் வாக்குகள் மே 2 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
திமுக கூட்டணியில் (DMK Alliance Party List) அங்கம் வகிக்கும் கட்சிக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதி பங்கீடு:
1. காங்கிரஸ் - 25 +1 (கன்னியாகுமரி மக்களவை தொகுதி)
2. விசிக - 6
3. சிபிஎம் - 6
4. சிபிஐ - 6
5. மதிமுக - 6
6. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 3 (உதயசூரியன் சின்னத்தில் போட்டி)
7. மனிதநேய மக்கள் கட்சி - 2(ஒரு இடத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி)
8. மக்கள் விடுதலை கட்சி - 1 (உதயசூரியன் சின்னத்தில் போட்டி)
9. தமிழக வாழ்வுரிமை கட்சி - 1 (உதயசூரியன் சின்னத்தில் போட்டி)
10. ஆதி தமிழர் பேரவை - 1 (உதயசூரியன் சின்னத்தில் போட்டி)
11. அகில இந்திய பார்வேர்டு பிளாக் கட்சி - 1 (உதயசூரியன் சின்னத்தில் போட்டி)
ALSO READ | செத்துப்போன சமஸ்கிருத மொழிக்கு செய்தி அறிக்கை எதற்கு? வைகோ ஆவேசம்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR