ஆதரவளிக்கும் முன் சிவசேனாவிடம் இருந்து மதச்சார்பின்மைக்கு ஒரு உறுதிப்பாட்டை காங்கிரஸ் நாடுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிராவில் புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக மகாராஷ்டிராவில் நடந்து வரும் அரசியல் சச்சரவுகளுக்கு மத்தியில், மாநிலத்தில் அரசாங்கத்தை அமைப்பதற்கு கட்சிக்கு ஆதரவளிக்கும் முன் சிவசேனாவிடம் இருந்து மதச்சார்பின்மைக்கு ஒரு உறுதிப்பாட்டை சோனியா காந்தி தலைமையிலான கட்சி விரும்புகிறது என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது., சிவசேனா ஒரு கடினமான இந்துத்துவா கட்சியின் பிம்பத்தை உடைத்து மென்மையான இந்துத்துவாவின் நிகழ்ச்சி நிரலை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிவசேனாவுடன் கூட்டணி வைத்து மகாராஷ்டிராவில் அரசாங்கம் அமைப்பது குறித்து விவாதங்களை நடத்துவதற்காக காங்கிரஸின் மூத்த தலைவர்களும் அதன் நட்பு கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சி(NCP) தலைவர்களும் நவம்பர் 17-ஆம் தேதி டெல்லியில் சந்திக்க உள்ளனர்.
இக்கூட்டத்தில் காங்கிரஸ், NCP மற்றும் சிவசேனா தலைவர்கள் ஒரு கூட்டாக பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் சிவசேனா மதச்சார்பின்மை அற்ற கட்சியாக தங்களை பிரதிநிதிதுவப் படுத்துவது மற்றும் மகாராஷ்டிராவில் புதிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதச்சார்பின்மை பாதையை சிவசேனா பின்பற்றினால் மட்டுமே அக்கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என அறியப்படுகிறது.
இது தொடர்பான வளர்ச்சியில், மகாராஷ்டிராவில் அரசாங்கம் அமைப்பது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுடன் நடந்து வரும் பேச்சுவார்த்தை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க காங்கிரஸ் தூதுக்குழு வியாழக்கிழமை (நவம்பர் 14) இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க உள்ளது.
முன்னதாக மாநிலத்தில் ஒரு நிலையான அரசாங்கத்தை அமைப்பதற்கான எந்தவொரு அரசியல் கட்சியும் அல்லது கூட்டணியும் உரிமை கோரத நிலையில்., செவ்வாய்க்கிழமை (நவம்பர் 12) மகாராஷ்டிராவில் ஜனாதிபதியின் ஆட்சிக்கு மாநில ஆளுநர் பரிந்துரை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை மாநிலத்தில் அரசியல் நிச்சயமற்ற தன்மையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக பரபரப்பான பார்லிகளில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றன.