Assembly Elections 2023: மிசோரமில் உள்ள 40 சட்டசபை தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு

Mizoram’s Assembly Elections 2023: நாளை (நவம்பர் 7, செவ்வாய்கிழமை) மிசோரம் சட்டசபை தேர்தலுக்கான 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குபதிவு நடைபெற உள்ளது. மொத்தம் 174 வேட்பாளர்களின் தலைவிதியை 8.52 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் தீர்மானிக்க உள்ளனர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 6, 2023, 12:17 PM IST
  • மிசோரம் சட்டசபைக்கு 40 இடங்களுக்கு வாக்குப்பதிவு நவம்பர் 7 நடைபெருகிறது.
  • 4,13,064 ஆண்கள் மற்றும் 4,39,028 பெண்கள் உட்பட 8,52,088 வாக்காளர்கள் உள்ளனர்.
  • மிசோரமில் பல இடங்களில் எம்என்எப், ஜேஎன்பி மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி
Assembly Elections 2023: மிசோரமில் உள்ள 40 சட்டசபை தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு title=

Mizoram Polls: மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியான நாள்முதல் தேர்தல் களை கட்டியுள்ளது. அந்த வரிசையில் நாளை முதலாவதாக நாளை (நவம்பர் 7) மிசோரம் சட்டமன்றத் தேர்தல் மற்றும் சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. மிசோரம் சட்டமன்ற தேர்தல் நிலவரம் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்.

மிசோரம் சட்டசபை தேர்தல் வாக்குபதிவு

மிசோரம் சட்டசபை தேர்தலில் (Mizoram’s Assembly Elections 2023) 40 இடங்களுக்கு வாக்குப்பதிவு நாளை (நவம்பர் 7, செவ்வாய்கிழமை) நடைபெற உள்ளது. 174 வேட்பாளர்களின் தலைவிதியைத் தீர்மானிப்பதில் 8.52 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் முக்கியப் பங்காற்றுவார்கள். 1,276 வாக்குச் சாவடிகளில் 4,13,064 ஆண்கள் மற்றும் 4,39,028 பெண்கள் உட்பட 8,52,088 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளதாக மிசோரமில் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், மிசோரமில் 18-19 வயதுக்குட்பட்ட 50,611 முதல் முறை வாக்காளர்களும், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 8,490 பேரும் உள்ளனர். நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தலை உறுதிசெய்ய, சுமார் 50 கம்பெனி மத்திய ஆயுதப் போலீஸ் படைகள் (Central Armed Police Forces - CAPF) மாநிலத்தில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. இந்திய தேர்தல் ஆணையம் (The Election Commission of India) 30 வாக்குச் சாவடிகளை முக்கியமானவையாக பட்டியலிட்டுள்ளது. 

தெலெப் வாக்குச் சாவடியில் வெறும் 26 வாக்காளர்கள் மட்டும்

தோராங் (ST) சட்டமன்றத் தொகுதியின் கீழ் உள்ள மிகச்சிறிய வாக்குச் சாவடியான தெலெப்பில் வெறும் 26 வாக்காளர்கள் உள்ளனர், அதே சமயம் ஐஸ்வால் கிழக்கு I (ஜெனரல்) சட்டமன்றத் தொகுதியின் கீழ் உள்ள மிகப்பெரிய வாக்குச் சாவடியான Zemabawk VIII, 1,481 வாக்காளர்களைக் கொண்டுள்ளது. தோராங் சட்டமன்றத் தொகுதியில் 14,924 வாக்காளர்கள் உள்ளனர், அதேசமயம் துய்ச்சாங் 36,041 வாக்காளர்களைக் கொண்ட மிக பெரிய சட்டமன்றத் தொகுதியாகும்.

மேலும் படிக்க - Assembly Elections 2023: 5 மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெறுவோம் -அமித்ஷா, ஜேபி நட்டா நம்பிக்கை

1,276 வாக்குச்சாவடிகளில் 30 முக்கியமானவை

நவம்பர் 5 ஆம் தேதி வாக்குச் சாவடி பணியாளர்களை அந்தந்தச் சாவடிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கியது. லாங்ட்லாய் மாவட்டத்தில் மட்டும் 181 வாக்குச் சாவடிகள் உள்ள. மாநிலத்தில் உள்ள 1,276 வாக்குச்சாவடிகளில் 30 முக்கியமானவை என அடையாளம் காணப்பட்டு உள்ளன. நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தலை உறுதி செய்வதற்காக சுமார் 5,000 வாக்குச்சாவடி பணியாளர்கள் இந்த இடங்களில் பணியாற்றுவார்கள்.

டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை

ஆளும் மிசோ தேசிய முன்னணி (Mizo National Front) தனது அதிகாரத்தை தக்கவைக்க முயற்சிக்கிறத. அதே நேரத்தில் ஜோரம் மக்கள் இயக்கம் (Zoram People’s Movement), பிஜேபி மற்றும் காங்கிரஸ் ஆகியவை ஆளும் அரசாங்கத்தை நீக்கி விட்டு ஆட்சி அமைக்க போட்டியிடுகின்றன. டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், சட்டமன்றத் தேர்தல்களை நடத்தும் ஐந்து மாநிலங்களில் மிசோரமும் ஒன்று.

மிசோரம் சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி?

2018 தேர்தலில், மிசோ தேசிய முன்னணி 40 இடங்களில் 26 இடங்களை 37.8% வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியது. காங்கிரஸ் ஐந்து இடங்களையும், பாஜக ஒரு இடத்தையும் கைப்பற்றியது. ஆளும் மிசோ தேசிய முன்னணி கட்சிக்கு சவால் விடும் வகையில் இந்த முறை காங்கிரஸ் களம் இறங்கியுள்ளது. இந்த முறை மிசோ தேசிய முன்னணி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருமா அல்லது வேறு ஏதேனும் கட்சிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதை தேர்தல் முடிவுகள் மட்டுமே சொல்லும். 

மேலும் படிக்க - தேர்தல் திருவிழாவுக்கு நாள் குறிப்பு! எங்கு? எப்பொழுது? எத்தனை தொகுதி? ஆட்சியில் யார்?

மிசோரம் தேர்தலில் மும்முனைப் போட்டி

இந்த முறை மிசோரமில் பல இடங்களில் எம்என்எப், சோரம் தேசியவாத கட்சி (ஜேஎன்பி) மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் போட்டி கடுமையாக இருப்பதால் யார் வெற்றி பெருவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இருப்பினும், மிசோரமில் மீண்டும் தனது அரசாங்கம் ஆட்சி அமைக்கும் என ஆளும் எம்என்எஃப் கூறியுள்ளது.

இந்த நான்கு சட்டமன்றத் தொகுதிகள் மிக முக்கியமானவை

மிசோரம் சட்டமன்ற தேர்தலை பொறுத்த வரை 4 இடங்கள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த தொகுதியின் மீது தான் அனைவரின் பார்வையும் இருக்கிறது. இதில் முக்கியமான இடத்தில் ஐஸ்வால் ஈஸ்ட்-1 தொகுதி உள்ளது. MNF தலைவரும் தற்போதைய முதல்வருமான ஜோரம் தங்கா இந்த தொகுதியில் போட்டியிடுவதால், இந்த இடம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதே தொகுதியில் சோரம் மக்கள் இயக்கத்தின் துணைத் தலைவர் லால்தன்சங்கா போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் காங்கிரஸ் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தது. தற்போது இங்கு முத்தரப்பு போட்டி நிலவுகிறது. 

இதேபோல், ஐஸ்வால் மேற்கு-3 தொகுதியும் முக்கியமானது. இங்கு ZPM எம்எல்ஏ வி.எல்.ஜெய்தன்ஜாமா மற்றும் காங்கிரஸின் லால்சவ்தா மற்றும் MNF இன் கே. சம்வேலா ஆகிய மூவரும் இந்த தொகுதியில் தங்கள் அதிர்ஷ்டத்தை சோதிக்கிறார். காங்கிரஸின் லால் சவ்தா மிசோரமின் மூத்த தலைவர் மற்றும் நிதி அமைச்சராகவும் இருந்துள்ளார். ஐஸ்வால் மேற்கு-3 தொகுதியின் சிறப்பு என்னவென்றால், இங்கு எந்தக் கட்சியும் தொடர்ந்து வெற்றி பெற்றதில்லை.

முதல்வர் போட்டியாளரும் ZPM தலைவருமான லால்து ஹோமா மீண்டும் மிசோரமின் செர்ச்சிப் தொகுதியில் போட்டியிட்டு தனது வெற்றி பயணத்தை தொடர வேண்டும் என முயற்சியில் உள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லால்துஹோமா வெற்றி பெற்றிருந்தார்.

ஹச்செக் தொகுதியும் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடந்த முறை இங்கிருந்து காங்கிரஸின் லால்ரிந்திகா ரால்டே தேர்ந்தெடுக்கப்பட்டார். இம்முறையும் அவர்தான் வேட்பாளர். அவருக்கு எதிரே எம்என்எப் கட்சியின் விளையாட்டு துறை அமைச்சருமான ராபர்ட் ரோமாவியா ரைட் போட்டி இடுகிறார். அதேசமயம், ZPM கட்சியை சேர்ந்த கேஜே லால்பியாகாங்கேட்டாவும் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார்.

மேலும் படிக்க - "தேர்தல் வரவிருப்பதால் சோதனை நிகழ்ந்தது"

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News