வேலைவாய்ப்பு: எழுத படிக்கத் தெரிந்தால்போதும் இந்து சமய அறநிலையத்துறையில் வேலை

எழுத படிக்கத் தெரிந்தவர்களுக்கு இந்துசமய அறநிலையதுறையில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 7, 2022, 08:11 PM IST
வேலைவாய்ப்பு: எழுத படிக்கத் தெரிந்தால்போதும் இந்து சமய அறநிலையத்துறையில் வேலை title=

தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் காலியாக இருக்கும் இந்துசமய அறநிலையத்துறை வேலை வாய்ப்புகள் விரைவில் நிரப்பப்பட இருக்கின்றன. இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பல்வேறு பணியிடங்களுக்கான 13 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன.  

கோவையில் இருக்கும் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிவில் இந்த காலிப் பணியிடங்கள் உள்ளன. எழுத்தர், காவலர், தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பணியின் பெயர்; வழக்கு எழுத்தர்

காலிபணியிடம் ; 1

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி 

ஊதியம்: ரூ.18,500 – 58,600

பணியின்பெயர்; சீட்டு விற்பனை எழுத்தர்

காலிப்பணியிடம்;  1

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி 

ஊதியம் : ரூ.18,500 – 58,600

பணியின் பெயர்; காவலர்

காலிப் பணியிடம்; 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்

ஊதியம் : ரூ.15,900 – 50,400

மேலும் படிக்க | IIP Recruitment 2022: எஞ்சினியரிங் மற்றும் அறிவியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு

பணியின் பெயர்; துப்புரவு பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை – 3

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்

ஊதியம் : ரூ.10,000 – 31,500

பணியின்பெயர்; கால்நடை பராமரிப்பு

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்

ஊதியம்: ரூ.10,000 – 31,500

பணியின்பெயர்; காவலர் (தொகுப்பூதியம்)

காலிப்பணியிடம்; 3

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்

ஊதியம் : ரூ.6,000

பணியின் பெயர்; திருமஞ்சனம்

காலியிப்பணியிடம்; 2

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். வேதபாட சாலையில் ஓராண்டு படித்திருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.15,900 – 50,400

பணியின் பெயர்; உதவி யானைப்பாகன்

காலிப்பணியிடம்; 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். யானை வளர்க்க பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.11,600 – 36,800

வயதுத் தகுதி : 01.07.2021 அன்று 18 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுய விவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் படிக்க | பெரியார் பல்கலைக்கழகத்தில் நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்பு!

முகவரி : உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில், பேரூர், பேரூர் வட்டம், கோவை மாவட்டம் – 541010

விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.06.2022

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News