JOBS: இந்திய ரயில்வேயில் வேலை பார்க்க விருப்பமா? கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு

Recruitment In Indian Railwyas: இந்திய ரயில்வே துறையில் 3115 காலி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 26, 2022, 02:41 PM IST
  • இந்திய ரயில்வே துறையில் 3115 காலி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன
  • இதற்கு 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்
  • 15 வயது பூர்த்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
JOBS: இந்திய ரயில்வேயில் வேலை பார்க்க விருப்பமா? கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு title=

புதுடெல்லி: இந்திய ரயில்வே துறையில் 3115 காலி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ஆட்சேர்ப்பு முகாமில் மொத்தம் 3115 வேலைவாய்ப்புகள் உள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், வெல்டர், வயர்மேன், பெயிண்டர் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக பிரிவுகளில் தொழில் பழகுநருக்கான அறிவிப்பு இது. கிழக்கு மத்திய ரயில்வே வாரியம்  வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின்படி, எந்தவொரு மாநிலத்தையும் பிறப்பிடமாக கொண்டவர்களும், இந்தியர்களும் விண்ணப்பிக்கலாம்.

இணைய வழியில் இந்த 3115 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் இந்த மாதம் 29ஆம் தேதி (29/10/2022) ஆகும்.

வேலைவாய்ப்பு விவரங்கள்

காலியிடங்கள்: 3115
கல்வித்தகுதி: 50% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பில் தேர்ச்சி 
வயது வரம்பு:  29/10/2022 தேதி அன்று, 15 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். 24 வயது பூர்த்தியடையாதவராகவும் இருக்க வேண்டும்
இடஒதுக்கீடு: வழக்கமான நடைமுறைகள் பின்பற்றப்படும்.

மேலும் படிக்க | கூகுளில் தேடக்கூடாத ‘சில’ விஷயங்கள்... மாட்டினால் கம்பி எண்ண வேண்டியது தான்!

இணைய வழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி தேதி 29/10/2022 ஆகும். 50% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தொழிற்பயிற்சிக்கான தேசிய மற்றும் மாநில (என்.சி்.வி.டி/எஸ்.சி.டி.வி) கவுன்சில்களில் இருந்து தொடர்புடைய வர்த்தகத்தில்(Trade) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

Welder (Gas and Electric), Sheet Metal Worker, Lineman, Wireman, Carpenter, Painter (General) தொடர்புடைய வர்த்தகத்தில் சான்றிதழ் பெற்றவர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதுமானது.

தெரிவு முறை: 10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் உத்தேச இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். எழுத்து, வாய்மொழி போன்ற எந்தவித தேர்வும் நடத்தப்படாது.

மேலும் படிக்க | Ration Card:இந்த ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக், சர்க்கரை கூட கிடைப்பதில்லையாம்

வயது வரம்பு: விண்ணப்பிக்க விரும்புவோர் 29/10/2022 அன்று 15 வயது பூர்த்தியடைந்தவராகவும், 24 வயது பூர்த்தியடையாதவராகவும் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். பட்டியலினத்தவர், பழங்குடி வகுப்பினருக்கு 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை கொடுக்கப்படும். இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகள் வரை வயது வரம்பு சலுகை கிடைக்கும். மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை வயது வரம்பு சலுகைகள் உண்டு.

விண்ணப்பபிப்பது எப்படி?
 www.rrcer.com - kolkata என்ற இணைய பக்கத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். சாதிச் சான்றிதழ், நகல் எடுக்கப்பட்ட  பாஸ்போர்ட் அளவு போட்டோ, கையொப்பம், 8,10ம் வகுப்பு கல்வி சான்றுகள் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பத்துடன் இந்த ஆவணங்களை பதிவேற்றுவது அவசியமானது.

இத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு ரயில்வே பயிற்சி மட்டுமே அளித்து வந்த போதிலும், ஆட்சேர்ப்பு நடைபெறும் முதல் நிலைக்காக அறிவிக்கப்பட்ட காலியிடங்களில் ( Level – 1 recruitment notification முந்தைய Gr. ‘D’ category posts (Grade Pay – Rs.1800/-)) 20 சதவீத இடங்களை அப்ரெண்டிஸ்களுக்காக இந்திய ரயில்வே ஒதுக்கீடு செய்துவருகிறது.எனவே, இந்தப் பயிற்சியை முடித்தவர்கள் நிரந்தர பணிகளில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

மேலும் படிக்க | அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை வாய்ப்பு - முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News