இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு - 1044 காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு

தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 1044 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Written by - S.Karthikeyan | Last Updated : May 11, 2022, 12:49 PM IST
  • தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் அரசு வேலை
  • 1044 அப்ரண்டிஸ் காலிப் பணியிடங்கள்
  • விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணபங்கள் வரவேற்பு
இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு - 1044 காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு title=

ரயில்வே பணிக்கு முயற்சிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, சூப்பரான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தென்கிழக்கு மத்திய ரயில்வே (SECR) நாக்பூர் பிரிவு 1044 டிரேட் அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த காலிப் பணியிடங்களுக்கு விண்ணபிக்க கடைசி தேதி ஜூன் 03, 2022. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான secr.indianrailways.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்.

தென் கிழக்கு மத்திய ரயில்வே காலிப்பணியிட விவரம்

பதவி: டிரேட் அப்ரண்டிஸ்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1044

ஊதிய அளவு: பயிற்சி விதிகளின்படி

தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் டிவிஷன் வாரியாக உள்ள காலிப் பணியிடங்கள்.  

நாக்பூர் பிரிவு: 980

மோதி பாக் பட்டறை நாக்பூர்: 64

மேலும் படிக்க | பயிற்சி இல்லாமலே போட்டித்தேர்வில் வெற்றி பெற எளிய வழிகள்!

தகுதி: 

விண்ணப்பதாரர்கள் 10+2 முறையின் கீழ் 10 ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து தொடர்புடைய டிரேடுகளில் ITI படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 15 முதல் 24 வயது வரை

எப்படி விண்ணப்பிப்பது?

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தென் கிழக்கு மத்திய ரயில்வேயின் இணையதளம் secr.indianrailways.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணபிக்க தேதிகள்

ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: மே 04, 2022

ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: ஜூன் 03, 2022

தென்கிழக்கு மத்திய ரயில்வே ஆட்சேர்ப்பு 2022 தேர்வு செயல்முறை: தகுதிப் பட்டியலின் (மெரிட் லிஸ்ட்) அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

மேலும் விவரங்களுக்கு: secr.indianrailways.gov.in 

மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி தேர்வு ஜூலை 2 ஆம் தேதிக்கு மாற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News