அரசு வேலைக்காக கோடிக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கின்றனர். மாநில மற்றும் மத்திய அரசு துறைகளில் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வரும்போதெல்லாம் லட்சக்கணக்கான இளைஞர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் துப்பரவு பணியாளர் வேலைக்குக்கூட முதுகலைப் பட்டப்படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிப்பதை பார்க்க முடிகிறது. அந்த வேலைகளுக்கு 8 ஆம் வகுப்பு கல்வித் தகுதியாக இருக்கும்போது, முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் துப்புரவு பணியாளர் வேலைக்கு விண்ணப்பிப்பது அரசு வேலையில் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தின் அடிப்படையிலேயே விண்ணப்பிக்கின்றனர்.
மேலும் படிக்க | தமிழ் படித்தவர்களுக்கு TNPSC ஆணையத்தில் அதிக சம்பளத்தில் வேலை!
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்கள் நிரப்புவதில் பெரிய சுணக்கம் ஏற்பட்டது. குறிப்பாக மத்திய அரசு துறைகளில் வெளியாகும் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள், வெளியிடப்படவில்லை. இந்த அறிவிப்புகளை லட்சக்கணக்கான மாணவர்கள் எதிர்நோக்கியிருந்தபோதும், அறிவிப்புகள் வெளியாகாமல் இருந்தது அரசு வேலையில் சேர வேண்டும் என்று இலக்கு வைத்திருந்த மாணவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. எதிர்கட்சிகளும் இது குறித்து விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கினர். நாடு முழுவதும் வேலை வாய்ப்பின்மை தலைவிரித்தாடுவதாகவும், மத்திய அரசு அலுவலகங்களில் கூட காலிப் பணியிடங்கள் நிரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன
இந்நிலையில், அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை கொடுக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து தீவிர ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அதிகாரப்பூர்வமாக பிரதமர் மோடியின் அலுவலகமும் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால், அரசுப் பணிக்கு செல்ல வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள், தங்களை தயார்படுத்திக் கொள்ளும்பட்சத்தில் இன்னும் சில மாதங்களில் மத்திய அரசுப் பணியாளர் ஆகலாம்.
மேலும் படிக்க | 10ஆவது முடித்திருந்தால் போதும் பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR