PM Modi:தேர்வு கொடுக்கும் அழுத்தத்தை நிர்வகிக்க மாணவர்களுக்கு ஆலோசனை

‘பரிக்ஷா பெ சர்ச்சா 2021’ நிகழ்ச்சியின் போது பிரதமர் நரேந்திர மோடி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் வீடியோ கான்பரன்சிங் (video conferencing) மூலம் உரையாடினார். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Apr 7, 2021, 08:49 PM IST
  • ‘பரிக்ஷா பெ சர்ச்சா 2021’ நிகழ்ச்சி, மெய்நிகர் கூட்டமாக நடைபெற்றாது
  • தேர்வு கொடுக்கும் அழுத்தத்தை நிர்வகிக்க மாணவர்களுக்கு ஆலோசனை
  • அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம் என பெற்றோருக்கு அறிவுரை
PM Modi:தேர்வு கொடுக்கும் அழுத்தத்தை நிர்வகிக்க மாணவர்களுக்கு ஆலோசனை title=

புதுடில்லி: ‘பரிக்ஷா பெ சர்ச்சா 2021’ நிகழ்ச்சியின் போது பிரதமர் நரேந்திர மோடி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் வீடியோ கான்பரன்சிங் (video conferencing) மூலம் உரையாடினார். 

இது முதல் மெய்நிகர் பரிக்ஷா பெ சர்ச்சா நிகழ்ச்சி என்றும், அவர்கள் அனைவரையும் நேரில் சந்திக்காதது தனக்கு மிகப்பெரிய இழப்பு என்றும் பிரதமர் மோடி கூறினார். 

“நாம் கடந்த ஓராண்டாக கொரோனாவுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறோம். உங்கள் அனைவரையும் சந்தித்து பேச வேண்டும் என்ற எனது அளப்பறிய ஆவலை நான் விட்டுவிட வேண்டியிருந்தது. உங்களை நேரில் சந்திக்காதது, உங்கள் உற்சாகத்தை நேரில் அனுபவிக்காதது எனக்கு மிகப்பெரிய இழப்பாகும் ”என்று பிரதமர் மோடி கூறினார்.

Also Read | IPL 2021: விராட் கோலி செய்யக்கூடிய ஐந்து முக்கிய சாதனைகளின் பட்டியல்

மன அழுத்தத்தை நிர்வகிப்பதில் தனது அனுபவத்தையும், அறிவையும் பகிர்ந்து கொண்டார் பிரதமர். பொதுத்தேர்வுகளை எதிர்நோக்கியிருக்கும் மாணவர்களுக்கு  பல முக்கியமான உதவிக்குறிப்புகளைக் கொடுத்தார்.

பராக்ஷா பெ சார்ச்சாவில் பரீட்சை அழுத்தத்தை நிர்வகிக்க பிரதமர் மோடி மாணவர்களுக்கு வழங்கிய உதவிக்குறிப்புகள் இவை:  

“உங்களுக்கு தேர்வுகளைப் பற்றி நன்றாகவேத் தெரியும். அவை திடீரென்று அழையா விருந்தாளியாக வரவில்லை. இதன் பொருள் நீங்கள் தேர்வுகளுக்கு பயப்படவில்லை, ஆனால் தேர்வுகள் தொடர்பாக உங்களைச் சுற்றி வளிமண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் பள்ளிகள், பெற்றோர்கள், உறவினர்கள் என அனைவரும் நீங்கள் மிகப்பெரிய ஒரு பெரிய நிகழ்வை சந்திக்கப்போவதாக எதிர்பார்ப்பதால், பெரும் நெருக்கடிக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலையை உருவாக்குகிறார்கள், ”என்று பிரதமர் மோடி கூறினார்.

“இது பற்றி அனைவரிடமும், குறிப்பாக பெற்றோரிடம் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். மாணவர்களுக்கு இப்படி அழுத்தம் கொடுப்பது இது மிகப்பெரிய தவறு என்று நினைக்கிறேன். நாம் தேவைக்கு அதிகமாக அச்சப்பட்டு, அழுத்தம் கொடுக்கத் தொடங்குகிறோம். தேர்வு என்பது வாழ்க்கையின் முடிவு அல்ல என்று நினைக்கிறேன். வாழ்க்கை மிக நீண்டது, தேர்வுகள் என்பது அதில் ஒரு சிறிய நிறுத்தமாகும். பெற்றோர்கள், மாணவர்களுக்கு அழுத்தத்தை உருவாக்கக்கூடாது, ”என்று பிரதமர் மோடி கூறினார்.

Also Read | Amazing! இதயத்துடிப்பு, சுவாச வீதத்தை அளவிட உதவும் ஸ்மார்ட்போன் கேமரா

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News