இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 17 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஹால் டிக்கெட்டை நாளை முதல் இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள 546 நகரங்களில் இருக்கும் மையங்களில் நீட் தேர்வு நடைபெற இருக்கிறது. முன்னதாக, இந்த தேர்வு மையங்கள் ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்புச் சீட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டு இருந்தது. அதேபோல் வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நடத்தப்பட இருப்பதாக தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) அறிவித்து உள்ளது. அதேபோல் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெறும். இத்தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படும்.
மேலும் படிக்க | அஞ்சல் துறையில் 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு
இந்நிலையில் தற்போது நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் நாளை முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் யுஜி 2022க்கான நுழைவுச் சீட்டை அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நீட் யுஜி 2022 தேர்வு தேதி, நேரம்: நீட் 2022 கல்விக் காலண்டரின் படி, நீட் யுஜி 2022 தேர்வு ஜூலை 17, 2022 அன்று நடத்தப்படும். நாடு முழுவதும் 546 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களிலும் அமைந்துள்ள பல்வேறு மையங்களில் தேர்வு நடத்தப்படும். மதியம் 2:00 மணி முதல் மாலை 5:20 மணி வரை தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நீட் யுஜி 2022 அட்மிட் கார்டு 2022 ஐப் பதிவிறக்குவது எப்படி: அட்மிட் கார்டு வழங்கப்பட்டவுடன், அனைத்து விண்ணப்பதாரர்களும் பின்வரும் படிகளைப் பின்பற்றுவதன் மூலம் தங்கள் அட்மிட் கார்டைப் பதிவிறக்கலாம்-
* முதலில் நீட் என்.டி.ஏ இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான neet.nta.nic.in ஐப் பார்வையிடவும்.
* இப்போது முகப்புப் பக்கத்தில், 'Download Neet UG 2022 Admit Card 2022' என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
* இப்போது ஒரு புதிய வலைப்பக்கம் திறக்கும்.
* விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி போன்ற தேவையான உள்நுழைவு சான்றுகளை உள்ளிடவும்.
* உங்கள் நீட் யுஜி 2022 அட்மிட் கார்டு திரையில் காட்டப்படும்.
* அட்மிட் கார்டை டவுன்லோட் செய்து எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
மேலும் படிக்க | டிகிரி முடித்தவர்களுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!
இந்த ஆண்டு நடைபெறும் நீட் தேர்வு நாடு முழுவதும் உள்ள 543 நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் நடைபெறும். இந்தியாவிற்கு வெளியே 14 தேர்வு மையங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR