NEET 2022: இன்று நீட் நுழைவுத்தேர்வு: மாணவர்களுக்கான கட்டுப்பாடுகள்

NEET UG 2022 Entrance Exam Today: நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளை கற்க விரும்பும் மாணவர்களுக்கான தகுதித் தேர்வு ‘நீட்’ இன்று நடைபெறுகிறது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 17, 2022, 11:57 AM IST
  • மாணவர்கள் அடையாள அட்டையை கொண்டு செல்ல வேண்டும்
  • இ-அடையாள அட்டை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது
  • வாட்ச், பெல்ட், ஷூ, கம்மல், மூக்குத்தி, தலை கிளிப்க்கு அனுமதியில்லை
NEET 2022: இன்று  நீட் நுழைவுத்தேர்வு: மாணவர்களுக்கான கட்டுப்பாடுகள் title=

புதுடெல்லி: கடும் கட்டுப்பாடுகளுடன் நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெறவிருக்கிறது. நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 2022-23-ம் கல்வியாண்டுக்கான மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான தகுதித் தேர்வான ‘நீட்' தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 17)) பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை நாடு முழுவதும் இருந்து 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 பேர் எழுத இருக்கின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 286 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து உள்ளனர்.

வழக்கம் போல, இந்த ஆண்டும் ‘நீட்' தேர்வு கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நடைபெற உள்ளது. எனவே தேர்வர்கள் ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அறிவுரைகளையும் தவறாது பின்பற்ற வேண்டும் என்று தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க | NEET UG 2022: நீட் தேர்வு ஹால் டிக்கெட் இன்று பெறலாம்: டவுன்லோட் செய்வது எப்படி

எனவே நுழைவுத் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள், ஹால் டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள அனைத்து அறிவுரைகளையும் பின்பற்ற வேண்டும் என்று தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தி இருக்கிறது. நீட் தேர்வு மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் இவை:

நுழைவுத் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களின் வருகைப் பதிவு பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும்.  ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து குறைந்தபட்சம் 2 நகல்களை வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

தேர்வு மையங்களின் நுழைவாயில்கள் தேர்வுக்கும் 30 நிமிடங்கள் முன்னதாக அதாவது பிற்பகல் 1.30 மணிக்கு மூடப்படும். அதன்பின், தேர்வு மையத்திற்குள் நுழைய மாணவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மேலும் படிக்க | அஞ்சல் துறையில் 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

தேர்வு எழுத வரும் மாணவர்கள், தங்கள் அடையாள அட்டையை கொண்டுவர வேண்டும். பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டையை தேர்வர்கள் தங்களுடன் வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

இ-அடையாள அட்டை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதாவது, செல்போன்களில் உள்ள மாணவர்கள் (பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை) அடையாள அட்டை நகல்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. 

தேர்வு எழுத வரும் மாணவர்கள், வாட்ச், பெல்ட், ஷூ, கம்மல், மூக்குத்தி, தலை கிளிப் உள்ளிட்டவற்றை அணிந்து வரக்கூடாது என்றும், நீட் நுழைவுத் தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு அறிவுறுத்தல்களையும் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | டிகிரி முடித்தவர்களுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News