Engineering படிக்க இனி 12 ஆம் வகுப்பில் Maths, Physics கட்டாயமில்லை: AICTE அதிரடி அறிவிப்பு

புதிய விதிப்படி, பி.டெக்கில் சேர்க்கைக்கு, மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்கள் தேவைப்படும். இதனுடன் 14 பாடங்களின் பட்டியலில் ஏதேனும் 3 பாடங்களில் தேர்ச்சி பெறுவது அவசியமாகும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 12, 2021, 07:32 PM IST
  • 12 ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் படிக்காமலும் பி.டெக்கில் சேரலாம்.
  • பெரிய அறிவிப்பை வெளியிட்டது AICTE.
  • இந்த விதிமுறைகள் இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும்.
Engineering படிக்க இனி 12 ஆம் வகுப்பில் Maths, Physics கட்டாயமில்லை: AICTE அதிரடி அறிவிப்பு title=

புதுடெல்லி: அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) பொறியியல் மாணவர்களுக்கு ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, இப்போது மாணவர்கள் 12 ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் படிக்காமலும் பி.டெக்கில் சேர்க்கை பெற முடியும். இந்த முறை புதிய கல்வியாண்டிலிருந்து (2021-22) தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகள் இந்த ஆண்டு முதல் பொருந்தும்

புதிய விதிப்படி, பி.டெக்கில் சேர்க்கைக்கு, மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்கள் தேவைப்படும். இதனுடன் 14 பாடங்களின் பட்டியலில் ஏதேனும் 3 பாடங்களில் தேர்ச்சி பெறுவது அவசியமாகும். இந்த 14 பாடங்களில் கணிதம் (Maths), இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், உயிரியல், இன்ஃபார்மேடிக்ஸ் பயிற்சி, பயோடெக்னாலஜி, தொழில்நுட்ப வணிக பாடப்பொருள், பொறியியல் கிராபிக்ஸ், வணிக ஆய்வுகள், தொழில்முனைவோர் கல்வி ஆகியவை அடங்கும்.

இந்த பாடங்களில் ஏதேனும் 3 பாடங்களில், 45 சதவீத மதிப்பெண்களை மாணவர்கள் பெற்றால் போதும். மேலும், ஒதுக்கீடு செய்யப்பட்ட பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் 40 சதவீதம் எடுத்தால் போதும்.

ALSO READ: NEET UG 2021 தேதி விரைவில் வெளியீடு, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தேர்வு

காமர்ஸ் பிரிவு மாணவர்களும் சேர்க்கை பெற முடியும்

வெவ்வேறு பின்னணியில் இருந்து வரும் மாணவர்களுக்கு கணிதம், இயற்பியல், பொறியியல் வரைதல் ஆகியவற்றில் ப்ரிடிஜ் கோர்ஸ்களை நடத்துமாறு AICTE பல்கலைக்கழகங்களை கேட்டுக்கொண்டுள்ளது. இதன் மூலம், அவர்களும் பி.இ, பி.டெக் படிப்புகளில் தேவைக்கேற்ப தகுதி பெற முடியும். இது தவிர, பொறியியலில் 3 ஆண்டு டிப்ளோமா படிக்கும் மாணவர்களுக்கும் பி.டெக்கில் லேட்டரல் எண்ட்ரி நுழைவு சேர்க்கை கிடைக்கும். ஒரு வேளை லேட்டரல் எண்ட்ரி நுழைவுக்கான காலியிடங்கள் முடிந்துவிட்டால், முதல் ஆண்டில் காலியாக உள்ள இடங்களின் அடிப்படையில் சேர்க்கை கிடைக்கும்.

AICTE அளித்துள்ள இந்த அறிவிப்பை பலர் வரவேற்றுள்ளனர். இதன் மூலம், பல மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான அதிக வாய்ப்பு கிடைக்கும் என பலர் கருதுகின்றனர்.

எனினும், 12 ஆம் வகுப்பு இயற்பியல் மற்றும் கணிதம் பொறியியல் (Engineering) மாணவர்களுக்கு முற்றிலும் அவசியமானது என்றும் பலர் வாதிட்டு வருகின்றனர். இதனால், AICTE ஆல் முன்மொழியப்பட்ட புதிய திருத்தங்களை நாடு முழுவதிலுமிருந்து பல ஆசிரியர்களும் பல்கலைக்கழகங்களும் விமர்சித்து வருகின்றனர்.

ALSO READ: புதிய கல்வி கொள்கை பற்றிய தனது நிலைப்பாட்டை விரைவில் அறிக்கையாக சமர்ப்பிக்கும் தமிழகம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News