CUET UG 2022: பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET)-UG இன் இரண்டாவது ஷிப்ட் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது... ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வுகள் ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை, அதாவது நேற்று நடத்த திட்டமிடப்பட்ட பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வின் இரண்டாவது ஷிப்ட் அனைத்து மையங்களிலும் ரத்து செய்யப்பட்டது என்றும், நுழைவுத்தேர்வின் முதல் ஷிப்ட் நிர்வாக மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் 17 மாநிலங்களில் உள்ள சில மையங்களில் ஒத்திவைக்கப்பட்டது என்றும் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் தெரிவித்தனர்.
"பல்வேறு நிர்வாக மற்றும் தொழில்நுட்ப காரணங்களால், 17 மாநிலங்களில் உள்ள ஒரு சில தேர்வு மையங்களில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி (முதல் ஷிப்ட்) திட்டமிடப்பட்ட CUET (UG) 2022 நுழைவுத்தேர்வுஆகஸ்ட் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது," என்று தேசிய தேர்வு முகமையின் மூத்த இயக்குனர் சாதனா பராஷர் தெரிவித்தார்.
மேலும் படிக்க | NEET PG 2022: முதுகலை நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின
மேலும், தொழில்நுட்ப காரணங்களால், CUET-UG நுழைவுத் தேர்வின் இரண்டாம் ஷிப்டுக்கான வினாத்தாளை மாலை 5 மணிக்கு மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும், மேலும் 489 மையங்களில் பதிவிறக்கம் மாலை 5:25 மணிக்கு தொடங்கும், அதே நேரத்தில் தேர்வு பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும்" என்று அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக தேர்வு கண்பாணிப்பாளர்கள் மற்றும் நகர ஒருங்கிணைப்பாளர்களிடம் இருந்து விளக்கம் கேட்கப்பட்டதாக பராஷர் தெரிவித்தார். "அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஆகஸ்ட் 4 ஆம் தேதி (பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை) திட்டமிடப்பட்ட இரண்டாவது ஷிப்ட் ரத்து செய்யப்பட்டது, அது இப்போது ஆகஸ்ட் 12 மற்றும் 14, 2022 க்கு இடையில் நடத்தப்படும்.
மேலும் படிக்க | வட கொரியாவில் யாருக்குமே காய்ச்சல் இல்லை
தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும், தேர்வில் பங்கேற்க பழைய அனுமதி அட்டை செல்லுபடியாகும். இது தொடர்பான சந்தேகங்களை தேர்வர்கள் datechange@nta.Ac. இல் மின்னஞ்சல் அனுப்பலாம். அதில், அவர்கள் தேர்வு தேதி மற்றும் ரோல் எண் உட்பட தேர்வு தொடர்பான தகவல்களை அதில் தெரிவிக்க வேண்டும்.
NTA ஆனது CUET(UG) - 2022 ஐ ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 20 வரை (பிற இளங்கலைத் தேர்வுகள் மற்றும் அரசிதழ் விடுமுறை நாட்களைத் தவிர்த்து) இந்தியா முழுவதும் சுமார் 259 நகரங்களிலும், இந்தியாவிற்கு வெளியே ஒன்பது நகரங்களிலும் அமைந்துள்ள 489 மையங்களில் நடத்துகிறது.
அதன்படி கடந்த ஜூலை 15ஆம் தேதி முதல் 20-ம் தேதி வரை முதற்கட்ட தேர்வு நடைபெற்று விட்டது. இரண்டாம் கட்ட தேர்வு ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. கணினி வழியில் தமிழ், இந்தி உட்பட 13 மொழிகளில் நடத்தப்படுகிற்து.
மேலும் படிக்க | கோவிட்-19 தடுப்பூசியால் மரணம்! இறப்புக்கும் தடுப்பூசிக்கும் இடையில் தொடர்பு உறுதி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ