தேசிய தலைநகரான டெல்லி மற்றும் அதன் சுற்றிப்புற பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அது கடுமையான பேரழிவுகளை சந்திக்கும் என சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ் அப்பில் இந்த தகவல்கள் பரவி வருகிறது.
கடந்த சில நாட்களாக டெல்லியில் 9.1 அளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என்று நாசா எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது. இந்த நிலநடுக்கமானது ஏப்ரல் மாதம் 7 முதல் 15 இடைப்பட்ட நாளில் ஏற்படும் என்று கூறியுள்ளது.
இந்த மிகப்பெரிய நிலநடுக்கம் டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ஜம்மு & காஷ்மீர், ராஜஸ்தான், பீகார், தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலும் தாக்கம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
மக்களை காப்பாற்ற அரசு மிகவும் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு www.nasaalert.com சென்று தகவல்களை தெரிந்துகொள்ளலாம் என வாட்ஸ் அப்பில் தகவல்கள் பரவி வருகிறது.
இது ஒரு தவறான தகவல் எனவும் நிலநடுக்கத்தை குறித்து கணிக்க முடியாது என்றும் இந்த செய்தியில் எதுவும் உண்மை இல்லை எனவும் நாசா நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அத்தகைய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.