21_வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. காமன்வெல்த் போட்டி மொத்தம் 12 நாட்கள் நடைபெறும். இந்த போட்டியில் மொத்தம் 71 நாடுகள் பங்கேற்கின்றன.
பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றுகள் நடைபெற்றது. இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிசி சிந்து ஆஸ்திரேலியாவின் வென்டி சென்னை எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 21-15, 21-9 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இவருடன் வெங்கடா புசர்லா,ருத்விகா, ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறினார்கள்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் எச்.எஸ் பிரனோய், ஸ்ரீகாந்த் கிதாம்பி ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினார்கள். கலப்பு இரட்டையர் பிரிவில் ராங்கிரெட்டி சாத்விக் - அஸ்வினி பொன்னப்பா, பிரனாவ் சோப்ரா - ரெட்டி என்.சிக்கி ஜோடி காலிறுதிக்கு முன்னேறின.
#PVSindhu, #HSPrannoy and #KidambiSrikanth beat their respective opponents in straight games to storm into the quarter-finals of #GC2018
Read @ANI story | https://t.co/2bhQCLzwMC pic.twitter.com/Fb7pj9ZF6S
— ANI Digital (@ani_digital) April 12, 2018