வீட்டிற்குள் நகங்களை வெட்டுகிறீர்களா ? இது உங்கள் வளர்ச்சியை நிறுத்த முடியும்!

நம்முடைய வீட்டில் சில விஷயங்களை செய்யக்கூடாது என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. இந்தப் பட்டியலில் மாலை நேரத்தில் நகம் வெட்ட கூடாது என்ற கூற்றும் நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 18, 2021, 06:44 AM IST
வீட்டிற்குள் நகங்களை வெட்டுகிறீர்களா ? இது உங்கள் வளர்ச்சியை நிறுத்த முடியும்! title=

நம்முடைய வீட்டில் சில விஷயங்களை செய்யக்கூடாது என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. இந்தப் பட்டியலில் மாலை நேரத்தில் நகம் வெட்ட கூடாது என்ற கூற்றும் நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. சிலபேர் சரிதான். 6 மணிக்கு பின்பு நகம் வெட்டக்கூடாது என்று ஒத்துக் கொள்வார்கள். 

எதனால் மாலை 6 மணிக்குப் பின்பு நகம் வெட்ட (Nails Cutting) கூடாது என்று நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்த பதிவினை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

ALSO READ | இறைவழிபாட்டில் தவிர்க்க வேண்டிய மலர்கள் எவை? - இதோ முழு விவரம்!

முதலாவதாக பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக மின்சாரம் (Electricity) கிடையாது. இப்போது இரவில் இருக்கும் இருளை விட, அந்த காலங்களில் இருள் இன்னும் அடர்த்தியாக சூழ்ந்திருக்கும். பகல் பொழுதில் நகம்வெட்டி கீழே விழுந்தாலே, தேடுவதில் பல கடினம் இருக்கும். மாலை நேரத்தில் இருள் சூழ்ந்த பின்பு நகத்தை வெட்டும் போது கீழே விழுந்து விட்டால் அதை கட்டாயம் நம்மால் கண்டுபிடிக்க முடியாது.

இது உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய ஒன்று. பொதுவாக நம்முடைய உடலில், நகத்தின் மூலமாக நோய்த்தொற்று (Infection) உடலுக்குள் செல்லும் என்பதும் உண்மையான ஒன்று. இதனால்தான் நக இடுக்ககளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லுவார்கள்.

இவ்வளவு கேடுகளை விளைவிக்கும் அந்த நகத்தை, நாம் வெட்டும்போது அது தவரி நாம் சாப்பிடும் சாப்பாட்டில் விழுந்து விட்டால், அதை நாம் உண்டு விட்டால் நம் வயிற்றுக்கு தான் கேடு உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த காலகட்டத்தில் பில்லி சூனியத்திற்கு எல்லாம் முதலிடம். சூனியம் வைப்பதற்கு, கெடுதல் செய்வதற்கு அவர்களுடைய நகம் கிடைத்தால் கூட போதும். இப்படியிருக்க, மாலைநேரத்தில் வெட்டும் நகம் கீழே விழுந்து அது, உங்களுக்கு பிடிக்காதவர் யார் கையில் கிடைத்தாலும் அது பிரச்சினையை தேடித் தந்து விடும். சில சமயங்களில் கீழே விழும் உங்கள் நகங்களில் கெட்ட சக்தி விரைவாக, வந்து புகுந்து கொள்ளும் என்பதும் ஒரு நம்பிக்கையாக இருந்து வந்தது.

ALSO READ | சிவனுக்கு செய்யும் அபிஷேகமும் அதனால் கிடைக்கும் பலன்களும்..!

மாலையில் லட்சுமி தேவி நம் வீட்டில் வாசம் செய்ய வருவாள் என்பது ஐதீகம். இப்படி இருக்கும் சமயத்தில், நம் வீட்டில் இருக்கும் கழிவுகளை வெளியில் அப்புறப்படுத்த கூடாது என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News