கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! என்னும் இறைஞ்சும் பாவை கோதை

 ஆண்டவனையே ஆண்ட ஆண்டாளின் திருப்பாவை....வைணவ பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரம் திவ்ய பிரபந்தங்களில் 473 முதல் 503 வரை உள்ள பாடல்களின் தொகுப்பு திருப்பாவை பாடல்கள். மார்கழி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது திருப்பாவையும் ஆண்டாளும். 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 11, 2021, 12:51 AM IST
  • வெற்றிகொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே!
  • அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும் தருவாயாக!
  • அது இருந்தால் தானே நாடு புகழ்கிறது
கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! என்னும் இறைஞ்சும் பாவை கோதை title=

புதுடெல்லி: ஆண்டவனையே ஆண்ட ஆண்டாளின் திருப்பாவை....வைணவ பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரம் திவ்ய பிரபந்தங்களில் 473 முதல் 503 வரை உள்ள பாடல்களின் தொகுப்பு திருப்பாவை பாடல்கள். மார்கழி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது திருப்பாவையும் ஆண்டாளும். 

மொத்தம் 30 பாடல்களை கொண்ட திருப்பாவை மிகவும் சிறப்பு வாய்ந்தது. மார்கழி மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் (Venkateswara Temple) சுப்ரபாதத்துக்குப் பதில் திருப்பாவை பாடப்படுகிறது. தாய்லாந்தில் மன்னருக்கு முடிசூட்டும்போது திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடப்படுகின்றன.

திருப்பாவை பாடல் 27

கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: எதிரிகளை வெற்றிகொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே! (Govinda) உன்னை நாங்கள் பாடி அருள் பெற வந்தோம். அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும் தருவாயாக! அது இருந்தால் தானே நாடு புகழ்கிறது. கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் பாஹுவலயம், காதில் அணியும் தோடு, கர்ணப்பூ, காலில் அணியும் பாடகம் ஆகிய அணிகலன்களை எங்களுக்குக் கொடு. புத்தாடைகளை வழங்கு. பின்னர் விரதத்தை நிறைவு செய்யும் வகையில், கூட்டமாக உன்னுடன் அமர்ந்து கையில் நெய் வழிய பால்சோறு உண்போம்.

Also Read | ‘காயத்திரி’ மந்திரம் சொல்வதால் நடக்கும் அதிசயம் தெரியுமா?...

உன்னுடன் கூட முடியாத பகைவரை வெல்லும் சிறப்புடைய கோவிந்தா !

நாங்கள் உன்னைப் புகழ்ந்து பாடி பரிசு பெற வந்துள்ளோம்.

நீ எங்களுக்கு வெகுமதியாக வழங்க வேண்டியது, நாட்டு மக்கள் எல்லோரும் கொண்டாடுகின்ற பரிசான, கையில் அணியும் அழகான சூடகம், வங்கி எனும் தோள்வளை, தோடு, மேல் காதில் அணியும் செவிப்பூ,பாடகம் எனும் கால் அணி, மற்றும் நாங்கள் அணிய மேலும் பல ஆபரணங்கள்.

இந்த ஆபரணங்களுடன் அழகான ஆடைகளை உடுத்துவோம் ! அதன் பின், பாற்சோறு மறையுமாறு அதன் மேல் நெய் பொழிந்த அக்கார அடிசிலை,எங்கள் முழங்கை எங்கும் நெய் ஒழுகுமாறு உண்போம்!

இவ்வாறு உன்னுடன் சேர்ந்திருந்து,உள்ளம் குளிர்ந்து மகிழவே வந்துள்ளோம் ! இதை உணர்ந்து எங்களை ஏற்றுக் கொண்டு அருள் புரிய வேண்டும் கண்ணா (Kannan) !

Also Read | நிம்மதியான தூக்கம் இல்லையா? அப்போ நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் இவர்தான்!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News