பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

Last Updated : May 1, 2017, 12:03 PM IST
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்  title=

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. 

இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயம் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. கோவில் திருப்பணிகள் முடிவடைந்து யாகசாலையில் 101 ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் கடந்த வாரம் தொடங்கியது. 

இதனையடுத்து பிள்ளையார்பட்டி கோயில் குடைமுழுக்கு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. கோபுரகலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டதை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Trending News