உலகமெங்கும் இருக்கும் தமிழர்களால், சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழில் மொத்தம் அறுபது ஆண்டுகள் உள்ளன, ஒவ்வொரு ஆண்டுக்கும் தனித்தனிப் பெயர்கள் உண்டு.
பிரபவ ஆண்டில் (முதல் தமிழ் ஆண்டு) துவங்கி அட்சய ஆண்டில் (அறுபதாவது தமிழ் ஆண்டு) ஒரு சுற்று நிறைவடைகிறது. அந்தவகையில், 31_வது தமிழ் ஆண்டான ஹேவிளம்பி நிறைவடைந்து 32_வது ஆண்டான விளம்பி தமிழ் ஆண்டு இன்று முதல் தொடங்கியுள்ளது.
இந்த புத்தாண்டை கொண்டாடும் வகையில் தமிழக கோவில் கலைக்கட்டி வருகிறது.
அந்தவகையில் கோவை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில், சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய ரூபாய் நோட்டு கட்டுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் 1 கோடி ரூபாய் மதிப்பிலான வைரம் இந்த அளங்கரிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Coimbatore: Idol at Sri Muthumariamman Temple decorated with currency worth Rs 4 Crores and diamonds & pearls worth Rs 1 Crore, on the occasion of Tamil new year. pic.twitter.com/YxNv0yIKUA
— ANI (@ANI) April 14, 2018
முன்னதாக இன்று காலை சென்னை அரும்பாக்கம் விநாயகர் கோவிலில் சுமார் 4 லட்சம் ரூபாய் நோட்டு கட்டுகளை கொண்டு கோவில் அலங்கரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுதேறும் தமிழ்ப்புத்தாண்டு அன்று கோவில் நிர்வாகம் இவ்வாறு செய்வது வழக்கமாகும். இவ்வாறு செய்வதால் மக்களுக்கு செல்வ செழிப்பு உண்டாகும் என நம்பப்படுகிறது.