பிறந்த குழந்தையை தேவாலயத்தில் விட்டுசென்ற தம்பதி!!

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏளனமாகப் பார்த்து கேலி செய்வார்கள் என்று பிறந்த குழந்தையை தேவாலயத்தில் விட்டுசென்ற பெற்றோர்! 

Last Updated : Jun 3, 2018, 04:37 PM IST
பிறந்த குழந்தையை தேவாலயத்தில் விட்டுசென்ற தம்பதி!! title=

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏளனமாகப் பார்த்து கேலி செய்வார்கள் என்று பிறந்த குழந்தையை தேவாலயத்தில் விட்டுசென்ற பெற்றோர்! 

கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் தம்பதியினர் பிட்டோ மற்றும் பிரபிதா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் இவர் மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து திருச்சூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக இவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்களுக்கு குழந்தையும் பிறந்துள்ளது. இதையடுத்து, இவர்கள் இருவரும் எடப்பள்ளியில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஃபோரேன் தேவாலயத்துக்குச் சென்றுள்ளனர். 

தேவாலயத்துக்கு சென்ற இவர்கள் பெற்றெடுத்த குழந்தையை வைத்துவிட்டு  யாரும் மற்றவர் பாக்கும் முன் அங்கிருந்து சென்றுள்ளனர். சிறிது நேரம் கழுத்து குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு தேவாலய காவலர்கள் வந்து பார்த்துள்ளனர். குழந்தையை கண்டதும் உடனே அவர்கள் காவல்துறையில் புகார் செய்துள்ளனர். 

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை சொதித்துள்ளனர். அப்போது இரு தம்பதியினர் அங்கு குழந்தையை விட்டுசென்றுள்ளது கண்டறியப்பட்டது.    

இந்த சம்பவம் தொடர்பாக அவர்களிடம் விசாரித்த போது அவர்கள் கூறியது..! 

நான்காவது குழந்தைக்கு தாயாகும் என் மனைவியையும், என்னையும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏளனமாகப் பார்த்து கேலி செய்வார்கள். அவர்களின் விமர்சன வலையத்துக்குள் சிக்கிக் கொள்வோம் என அஞ்சி இந்த காரியத்தை செய்ததாக அவர்கள் கூறியுள்ளனர். 

இதை தொடர்ந்து, பிட்டோ மற்றும் குற்றத்துக்கு உடந்தையாக இருந்த அவரின் மனைவி பிரபிதா மீதும் ஐ.பி.சி 317 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

 

Trending News