தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு மையம் வெளிமாநிலங்களில் ஒதுக்கியதைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிருப்புப் போராட்டம்.
நீட் தேர்வு: வெளிமாநிலத்திற்கு செல்லும் மாணவர்களுக்கு உதவி!
சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய இளநிலை கல்விக்கழகத்தின் தென்மண்டல அதிகாரியை சந்தித்து மனு ஒன்றை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அளித்தார். அந்த மனுவில், நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலே தேர்வு மையம் ஒதுக்க வேண்டும் எனவும், நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. பின்னர் திடிரென அங்கேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
தமிழக மாணவர்களின் உரிமைகள் காத்திட நீட் மண்டல அலுவலகத்தில் தமிழக வாழ்வுரிமைக் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் தொடர்கிறது.#NEET. pic.twitter.com/SGdHzT7QNb
— Velmurugan.T (@VelmuruganTVK) May 4, 2018
பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் வேல்முருகன் கூறியதாவது:-
நீட் விவகாரத்தில் மாணவர்களின் எண்ணங்களை புரிந்து அரசுகள் செயல்பட வேண்டும். தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவுகளை சிதைக்கும் நோக்கத்தோடும், கல்வி உரிமையை பறிக்கும் செயலிலும் மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதற்கு தமிழக அரசும் துணை போகிறது.
#NEET.#tamilnadu. pic.twitter.com/OkgVnvONpd
— Velmurugan.T (@VelmuruganTVK) May 4, 2018
நீட் தேர்வு எழுத வெளி மாநிலத்திற்கு செல்லும் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். வெளி மாநிலத்திற்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவ-மாணவிகளுக்கு ரூ. 1000/- தருவதாக கூறி தமிழக அரசு அவமானபடுத்துகிறது. நீட் தேர்வு எழுத வெளி மாநிலம் செல்ல நேர்ந்தால், தமிழக மாணவ-மாணவிகள் நீட் தேர்வில் பங்கேற்க மாட்டார்கள் என்று கூற தமிழக அரசுக்கு ஏன் திராணி இல்லை எனவும் கேள்வி எழுப்பினார்.
மண்டல NEET தேர்வுக்கான
அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம். pic.twitter.com/gVXGQi1oVI— Velmurugan.T (@VelmuruganTVK) May 4, 2018
காவிரி வாரியம், நீட் தேர்வு, மீத்தேன் மற்றும் ஹைட்ரொ கார்பன் திட்டம் என அனைத்திலும் மத்திய அரசு தமிழக மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது என்று குற்றம் சாட்டினார்.
மேலும் நீட் தேர்வை ரத்து செய்யும் வரை எங்களது போராட்டம் தொடரும் எனவும் கூறினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள, பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா, சார்பில், இன்று மாலை சேப்பாக்கத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட கண்டண ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டண உரையாற்றினேன். pic.twitter.com/LstxYFuliM
— Velmurugan.T (@VelmuruganTVK) May 3, 2018