நாடு முழுவதும் 11 மாநிலங்களில் காலியாக உள்ள 10 சட்டசபை தொகுதிகள், 4 லோக்சபா தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும், கர்நாடக மாநிலம் ஆர்.ஆர்.தொகுதியில் சட்டசபை தேர்தலும் கடந்த வாரம் நடந்தது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டன.
இதில், உத்தரபிரதேச மாநிலம், கைரானா தொகுதி பாஜக எம்.பி. ஹுக்கும் சிங் காலமானார். அந்தத் தொகுதியில் பாஜக சார்பில் ஹுக்கும் சிங்கின் மகள் மிரிகங்கா சிங் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ராஷ்டிரிய லோக்தள் சார்பில் தபசம் ஹசன் களமிறங்கி உள்ளார். இவருக்குக் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.
இந்த தொகுதியில் ராஷ்டிரிய லோக்தள் சார்பில் தபசம் ஹசன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். பாஜக வேட்பாளரால் தொட முடியாத அளவு முன்னிலை வித்தியாசம் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி பாஜக வேட்பாளரை விட, தபசம் ஹசன் 36,000 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார்.
உ.பி.யின் நூர்பூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் முடிவும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் 6,211 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
பீகார் மாநிலத்தின் ஜோகிஹாத் சட்டப்பேரவைத் தொகுதியில் லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி வெற்றி பெற்றுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி சார்பில் போட்டியிட்ட ஷாபாவாஷ் ஆலம் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக ஆதரவு பெற்ற ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் முர்ஷித் ஆலத்தைக் காட்டிலும் 41 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அதேபோன்று, கர்நாடகா மாநிலம் ஆர்.ஆர்.தொகுதி சட்டசபை தேர்தலில் காங்., 4 இடங்களிலும், பா.ஜ., ஒரு இடத்திலும், மாநில கட்சிகள் 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.