இந்திய நாணயத்தின் தன்மை காலப்போக்கில் பரிணமித்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கரன்சி நோட்டுகள் வித்தியாசமான முகத்தைக் கொண்டிருந்தாலும், சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் இந்திய ரூபாயின் வடிவமைப்பு முற்றிலும் மாறியது. புதிய டிசைன் நோட்டுகள் எளிதில் கிடைத்தாலும், பழைய டிசைன் நோட்டுகள் காலப்போக்கில் புழக்கத்தில் இல்லாமல் போய்விட்டது.
இருப்பினும், பல மக்கள் மற்றும் நாணயவியல் வல்லுநர்கள் பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுககளை வாங்குவதில் ஆர்வமாக உள்ளனர். இவை எண்ணிக்கையில் வரம்புக்குட்பட்டவை என்பதால், இந்த நோட்டுகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனெனில் இதன் மூலம் பல கணக்கில் நீங்கள் சம்பாதிக்கலாம். எனவே, புழக்கத்தில் இல்லாத அல்லது சந்தையில் அரிதாக இருக்கும் பழைய நோட்டுகளை வைத்திருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், அந்த கரன்சி நோட்டுகளை ஏலம் விடுவதன் மூலம் ஒரு லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் சம்பாதிக்கலாம். இந்த நோட்டுகளை ஈபேயில் விற்கலாம். இதே போன்ற நோட்டுகள் ஏற்கனவே பட்டியலிடப்பட்டுள்ளன.
கரன்சி நோட்டுகளில் இருந்து அதிகபட்ச பலனை பெறுவது எப்படி?
eBay போன்ற தளங்களில் ஒரு ரூபாய் நோட்டுகளை விற்பது ஆச்சரியமாகத் தோன்றலாம், ஆனால் இந்த தனித்துவமான வாய்ப்பின் மூலம் பணம் சம்பாதிக்க முடியும்.
பழைய 1 ரூபாய் நாணயத்திற்கு எவ்வளவு மதிப்பு?
அதேபோல் ஒரு ரூபாய் பழைய நாணயத்தை விற்று நீங்கள் ரூ.10 கோடி வரை சம்பாதிக்கலாம். ஆனால் இது சாதாரண ஒரு ரூபாய் நாணயம் கிடையாது. இந்த நாணயம் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்ததாக இருக்க வேண்டும், அதன்படி இந்த நாணயம் 1885 ஆம் ஆண்டில் அச்சடிக்கப்பட்ட நாணயமாக இருந்தால் மட்டுமே இதற்கு 10 கோடி ரூபாய் வரை பணம் கிடைக்கும்.
இந்த ஆன்லைன் போர்ட்டல்களில் நோட்டுகளை எளிதாக விற்கவும்
* உங்களிடம் இந்த அரிய 1 ரூபாய் இருந்தால், அதை ஆன்லைனில் Quikr என்ற விளம்பரத் தளத்தில் விற்கலாம்.
* இந்த இணையதளத்தில் இந்த அரிய நாணயத்தை வாங்குபவர்கள் பெரும் தொகையை செலுத்தி வருகின்றனர்.
* 1 ரூபாய் நாணயத்தை விற்க, நீங்கள் முதலில் Quikr இல் விற்பனையாளராக பதிவு செய்ய வேண்டும்.
* அதன் பிறகு, இந்த நாணயத்தின் புகைப்படத்தை கிளிக் செய்து பதிவேற்றவும். அதன் பிறகு உங்கள் விளம்பரம் காட்டப்படும்.
* அதன் பிறகு, உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை உள்ளிடவும்.
* நீங்கள் வழங்கிய தகவலை இணையதளம் சரிபார்க்கும்.
* உங்களின் இந்தக் நாணயத்தை விரும்பி வாங்க ஆர்வமுள்ளவர்கள் உங்களை நேரடியாகத் தொடர்புகொள்வார்கள்.
* இதற்குப் பிறகு, ஆன்லைன் போர்ட்டலில் இந்த பழைய நாணயத்தை விற்பதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்களுக்குச் சொந்தக்காரர் ஆகலாம்.
(பொறுப்புத் துறப்பு: ஜீ தமிழ் நியூஸ் பழைய நாணயங்கள் அல்லது வங்கி நோட்டுகளை ஆன்லைனில் வாங்குவதையும் விற்பதையும் ஊக்குவிக்கவில்லை. இந்த செய்தி வெறும் தகவலுக்காக மட்டுமே பகிரப்பட்டுள்ளது)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ