முடங்கிய UPI IDகள்! இனி யாரெல்லாம் ஆன்லைன் பரிவர்த்தனை செய்ய முடியாது தெரியுமா?

Digital Payment UPI IDs: ஒரு வருடத்திற்கும் மேலாக ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளாத UPI ஐடிகள் நேற்று முதல் செயல்படவில்லை

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 2, 2024, 08:17 AM IST
  • புத்தாண்டு முதல் அமலுக்கு வந்த விதிமுறைகள்
  • குறிப்பிட்ட சிலருடைய UPI ஐடிகள் முடங்கியது
  • ஐடி முடக்கப்பட்டதன் எதிரொலி என்ன?
முடங்கிய UPI IDகள்! இனி யாரெல்லாம் ஆன்லைன் பரிவர்த்தனை செய்ய முடியாது தெரியுமா? title=

UPI Blocked: புத்தாண்டில் காலடி எடுத்து வைத்துவிட்டோம். இதுவரை இருந்த பல விதிமுறைகளில் மாற்றங்கள், நேற்று முதல் ஏற்பட்டுவிட்டது. நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) வெளியிட்ட முக்கிய அறிவிப்பின்படி, யூபிஐ மூலம் பரிவர்த்தனை செய்வதற்கான புதிய விதிகள் அமலுக்கு வந்தான. அதன்படி, ஒரு வருடத்திற்கும் மேலாக  ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளாத UPI ஐடிகள் நேற்று முதல் செயல்படவில்லை

செயலற்ற UPI ஐடிகளைத் முடக்குவதற்கான வழிமுறைகளை இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) சில வாரங்களுக்கு முன்னதாக வெளியிட்டது. அதன்படி, ஒரு பயனர் ஓராண்டு அல்லது அதற்கும் மேலாக யுபிஐ ஐடி (UPI ID) மூலம் ஆன்லைன் பரிவர்த்தனைகளைச் செய்யவில்லை என்றால், டிசம்பர் 31க்கு பிறகு அந்த UPI ஐடி முடக்கப்படும். அதான்படி, ஜனவரி 1, 2024 முதல் ஓராண்டாக செயல்பாட்டில் இல்லாத ஐடி முடக்கப்பட்டுவிடும்.

யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) இப்போது நாட்டில் பணம் செலுத்துவதற்கான சிறந்த தேர்வுகளில் ஒன்றாக உள்ளது. இந்த வசதி தொடங்கியதில் இருந்து, இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கணிசமாக அதிகரித்துவிட்டது என்பது குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒன்றாகும். எளிய முறையில் பணம் செலுத்துவதற்கான இந்த வசதி மக்களுக்கு பல நன்மைகளை வழங்கியது.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களே... இன்னும் 7 நாள் தான் இருக்கு... சான்ஸை மிஸ் பண்ணாதீங்க!

UPI பேமெண்ட்டுகளை மேலும் மேம்படுத்தி சிறப்பாகச் செய்ய, அவ்வப்போது சில விதிமுறைகளும் புதுப்பிக்கப்படுகின்றன. அந்த வகையில் பயன்படுத்தாத ஐடிக்களை முடக்கும் அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பின்படி, நேற்று முதல் பல ஐடிக்கள் முடங்கின.

Paytm, Google Pay, PhonePe போன்ற பேமெண்ட் ஆப்ஸ் மற்றும் வங்கிகள் என அனைத்து நிறுவனங்களும், செயல்படாத UPI ஐடிகள் மற்றும் ஒரு வருடத்திற்கும் மேலாக செயல்படாமல் இருக்கும் ஐடிக்களை முடக்க வேண்டும் என, நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அறிவுறுத்தியது.

இதன்படி 12 மாதங்களுக்கும் மேலாக பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படாத UPI ஐடிகள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் யூபிஐ பண பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாது. இது செயலற்ற கணக்குகளை துஷ்பிரயோகம் செய்வதற்கான வாய்ப்புகளைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அதிகரித்த பரிவர்த்தனை வரம்புகள்

NPCI, UPI பரிவர்த்தனைகளுக்கான புதிய அதிகபட்ச தினசரி கட்டண வரம்பு 1 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கல்வி மற்றும் சுகாதார வசதிகளுக்கான UPI பரிவர்த்தனை வரம்பு, தற்போது 5 லட்சமாக உயர்த்தப்பட்டது. முன்னதாக, இந்த பரிவர்த்தனை வரம்பு ரூ.1 லட்சமாக இருந்தது.  டிசம்பர் 8 ஆம் தேதி ரிசர்வ் வங்கி இந்த வரம்பை அதிகரித்து உத்தரவிட்டது. 

மேலும் படிக்க | அதிர்ச்சி செய்தி!! ஜனவரி 1 முதல் UPI பரிவர்த்தனை செய்ய முடியாது... ஐடி முடக்கப்படும்

நான்கு மணிநேர நேர வரம்பு

அதிகரித்து வரும் ஆன்லைன் பேமெண்ட் மோசடிகளை குறைக்க, இதற்கு முன் பரிவர்த்தனை செய்யாத பயனர்களுக்கு இடையே ரூ.2,000க்கு மேல் முதல் பேமெண்ட்டுக்கு நான்கு மணி நேர அவகாசம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் UPI பயனர்கள் ‘Tap and Pay’ அம்சத்தை செயல்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

UPI ஏடிஎம்

நாடு முழுவதும் UPI ATMகளை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இந்த ஏடிஎம்கள் மூலம், உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாகப் பணத்தை எடுக்க QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம்.

நவம்பர் 2023 இல் UPI பரிவர்த்தனைகள் 2023 அக்டோபரில் ரூ. 17.16 டிரில்லியனுடன் ஒப்பிடுகையில் 1.4 சதவீதம் அதிகரித்து ரூ.17.4 டிரில்லியன் மதிப்பில் புதிய உச்சத்தை எட்டியது. அதே நேரத்தில், கடந்த மாதம் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 1.5 சதவீதம் குறைந்து 11.24 பில்லியனாகவும், 11.41 என்ற சாதனை உயர்வாகவும் இருந்தது. 

மேலும் படிக்க | மின்சாரத் தேவை குறைகிறதா? ஆச்சரியமளிக்கும் டிசம்பர்! ஆனால் இது 2023 ஸ்பெஷல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News