வி.ஆர்.எஸ் பெற்றவர்கள் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் சேர வயது வரம்பு என்ன?

Senior Ciizens Saving Scheme: அஞ்சலகங்கள் மூத்த குடிமக்களுக்கான பல சேமிப்பு திட்டங்களை நடத்துகின்றது. அதில் ஒரு முக்கியமானது மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்... யாருக்கு இதில் அதிக பயன் கிடைக்கும்?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 8, 2024, 03:33 PM IST
  • மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்
  • 50 வயது முதலே பயன்பெறுபவர்கள் யார்
  • விஆர்.எஸ் பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு
வி.ஆர்.எஸ் பெற்றவர்கள் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் சேர வயது வரம்பு என்ன? title=

சிறுக கட்டி பெருக வாழ் என்ற பழமொழியை அனைவரும் அடிக்கடி கேட்டிருக்கலாம். அதிலும் இன்றைய தலைமுறையைவிட, வயதானவர்கள் நிறைய கேட்டிருப்பார்கள். அவர்கள் அதன்படி நடக்கவும் செய்வார்கள். தற்போது 60 வயதுக்கும் அதிகமானவர்கள், தங்கள் பணத்தை சேமிக்கும்போது பணத்துக்கு போதுமான பாதுகாப்பை மட்டுமல்ல, அதில் இருந்து நல்ல வருவாயையும் கொடுக்கும் திட்டத்தில் தங்கள் வாழ்நாள் சேமிப்பை வைக்க விரும்புவார்கள்.

அப்படி ஒரு சேமிப்புத் திட்டம் தான்,  மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS). இந்த திட்டம் அஞ்சல் அலுவலகத்தால் நடத்தப்படும் உத்தரவாதமான வருமானத் திட்டமாகும், மூத்த குடிமக்களுக்கு 8.20 சதவீத வருடாந்திர வட்டி கொடுக்கும் இந்தத் திட்டத்தில் போடும் பணம் ஐந்து ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்ய வேண்டும்.

இந்த மூத்தக் குடிமக்கள் சேமிப்புத் திட்டம், சந்தையுடன் இணைக்கப்படாத திட்டம் ஆகும். ஒரு முறை முதலீடு செய்த பணத்திற்கு, காலாண்டு அடிப்படையில் வருமானம் கிடைக்கும். இந்ததி திட்டத்தில் குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ. 1,000 என்றால், அதிகபட்ச வைப்புத் தொகை 30 லட்சம் ரூபாய். ஆயிரம் ரூபாயின் மடங்குகளின் தான் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும்.

இந்த வருமானம் அவர்களின் ஓய்வுக்காலத்திற்கான நல்ல வருமான வாய்ப்பாக இருக்கும். பொதுவாக முதியவர்களின் செலவு, அவர்களின் வயதான காலத்தில் அதிகமாக இருக்கும். அவர்களின் மாதாந்திர செலவுகளுக்கு அவர்களுக்குப் பணம் தேவைப்படும் இந்தக் காலத்தில் அவர்கள் வேலை பார்த்து சம்பாதிக்காவிட்டால் பிறரை சார்ந்திருக்க வேண்டும். எனவே, ஒருவர் பணியில் இருந்து ஓய்வு பெறும்போது அல்லது வேலை செய்வதில்லை என்று முடிவு செய்யும்போது தங்களுக்கென மாதாந்திர வருமானம் கிடைப்பதை உறுதி செய்துக் கொள்ளவேண்டும்.

மேலும் படிக்க | SBI வங்கியின் அற்புதமான திட்டம் : 400 நாட்களில் நீங்கள் பணக்காரராகலாம்..! லோன் வசதியும் உண்டு

மருத்துவச் செலவுகள் உட்பட பிற செலவுகளைச் சமாளிக்க உதவும் வருமான ஆதாரம் தேவை. இந்தச் செலவுகளுக்காக தங்கள் குழந்தைகள் உட்பட யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றா நிலை ஏற்பட்டால் அது நிம்மதியைத் தரும். இதற்காக, சம்பாதிக்க ஆரம்பிக்கும் காலத்தில் இருந்தே ஓய்வுக் காலத்திற்காக திட்டமிட்டு சேமிப்பது நல்லது.

இளமைப் பருவத்தில் தொடர்ந்து முதலீடு செய்து, முதுமைக் கால்த்திற்காகச் சேமித்து, வழக்கமான வருமானத்தைத் தரும் திட்டத்தில் மறு முதலீடு செய்வதன் மூலம் தனது ஓய்வூதியத்தைத் திட்டமிடலாம். அதற்கான திட்டங்களில் மிகவும் சிறந்த ஒரு திட்டம் தான் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS).

ஒரு உதாரணத்தின் மூலம் இந்த மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் இருந்து கிடைக்கும் வருமானத்தைப் பார்ப்போம். ஒருவர் இருபது லட்சம் ரூபாய் தொகையை ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் ஆண்டுக்கு 1,64,000 ரூபாய் ஆண்டு வட்டி கிடைக்கும்.  

காலாண்டுக்கு 41 ஆயிரம் ரூபாய் அல்லது ஆண்டுக்கு 1,64, 000 ரூபாய் வட்டியாக வருமானம் வரும். இந்த கணக்கீடு எப்படி செய்யப்பட்டது என்பதைத் தெரிந்துக் கொள்வதற்கு முன்னதாக, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் அடிப்படை அம்சங்களைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் மிகப்பெரிய அகவிலைப்படி உயர்வு: அறிவிப்பு விரைவில்

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS)
இது அஞ்சல் அலுவலகத்தால் நடத்தப்படும் ஒரு சிறு சேமிப்பு, உத்தரவாத வருவாய் திட்டமாகும், இங்கு மூத்த குடிமக்கள் 8.20 சதவீத வருடாந்திர வட்டியைப் பெறுகிறார்கள்.

பங்குச் சந்தையுடன் இணைக்கப்படாத இந்தத் திட்டத்தில் ஐந்தாண்டுகள் லாக்-இன் காலம் உண்டு. வட்டி வடிவில் காலாண்டு அடிப்படையில் வருமானத்தைப் பெற ஒரு முறை முதலீடு செய்ய வேண்டும்.

திட்டத்தில் குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ. 1,000 மற்றும் ஆயிரம் ரூபாயின் மடங்குகளில் செய்யலாம் என்றாலும், அதிகபட்ச வைப்புத் தொகை ரூ. 30 லட்சம் மட்டும் தான்.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்வதன் நன்மைகள்

ஒரு நிதியாண்டில் ரூ. 1.50 லட்சம் வரையிலான டெபாசிட்களுக்கு வருமான வரிச் சட்டம், 1961ன் பிரிவு 80சியின் கீழ் வரிச் சலுகைகள் கிடைக்கும்.

60 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு தனிநபரும், 55 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 60 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற அரசு ஊழியர் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 60 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற பாதுகாப்புப் பணியாளர்கள் SCSS கணக்கைத் திறக்கலாம்.

காலாண்டு அடிப்படையில் கொடுக்கப்படும் வட்டியானது, டெபாசிட் செய்யப்பட்ட தேதியிலிருந்து மார்ச் 31/ஜூன் 30/செப்டம்பர் 30/டிசம்பர் 31 என காலாண்டு அடிப்படையில் வட்டி கொடுக்கப்படும். ஒரு நிதியாண்டில் 50,000 ரூபாய்க்கு மேல் பெறும் வட்டிக்கு வரி கட்ட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் TDS கழிக்கப்படும்.

மேலும் படிக்க | PF கணக்கிலிருந்து ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் பணத்தை எடுப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News