No Cost EMI: வாடிக்கையாளர்களை கவரும் வட்டியில்லா கடன் தவணை! செயலாக்க கட்டணம் இல்லையா?

What Is No Cost EMI : வட்டி அல்லது கட்டணங்கள் எதுவும் செலுத்தாமல் மாதத் தவணைகளில் பொருளைச் வாங்க உதவும் நோ காஸ்ட் இஎம்ஐ! இதில், வட்டி வசூலிக்கப்படுவதில்லை என்பது உண்மையா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 21, 2024, 11:26 PM IST
  • வட்டியில்லா கடன் தவணை!
  • செயலாக்க கட்டணம் இல்லாத கடன்
  • ஆன்லைன் ஷாப்பிங் பலன்கள்
No Cost EMI: வாடிக்கையாளர்களை கவரும் வட்டியில்லா கடன் தவணை! செயலாக்க கட்டணம் இல்லையா? title=

No Cost EMI : வட்டியே இல்லாமல் அசல் விலைக்கு பொருட்களை வாங்கி, மாதாமாதம் தவணைகளில் பணத்தை திருப்பித் தரும் தவணைத் திட்டம் வட்டியில்லா தவணைத் திட்டம் (No Cost EMI) ஆகும், இது கூடுதல் வட்டி அல்லது கட்டணங்கள் எதுவும் செலுத்தாமல் மாதத் தவணைகளில் ஒரு பொருளைச் வாங்க உதவுகிறது. ஆனால், உண்மையில் இந்த திட்டத்தில், வட்டி வசூலிக்கப்படுவதில்லை என்ற கூற்று உண்மையானதா? தெரிந்துக் கொள்வோம்... 

வட்டியில்லா தவணைத் திட்டம் (No Cost EMI)

நோ காஸ்ட் இஎம்ஐயில் வட்டி அல்லது செயலாக்கக் கட்டணம் சேர்க்கப்படுவதில்லை. ஆனால் வழக்கமான மாத தவணையில், வட்டி மற்றும் செயலாக்க கட்டணம் இரண்டும் சேர்ந்திருக்கும் என்றும் கூறப்படுகிறது. உண்மையில் , இந்தத் திட்டத்தில் கூடுதல் பணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லையா? என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது.

கட்டணமில்லா தவணை மற்றும் வட்டி விகிதம்: பண்டிகைகள் மற்றும் பண்டிகை காலத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு வகையான சலுகைகளை நிறுவனங்கள் வழங்குவது வழக்கம். பண்டிகைக் காலங்களில், ஆன்லைனில் பொருட்களை வாங்கும்போது வாடிக்கையாளர்களுக்கு வட்டியில்லா EMI தெரிவுகளை நிறுவனங்கள் மற்றும் இ-காமர்ஸ் இணையதளங்கள் வழங்குகின்றன.

இந்த ஆஃபரில் இப்போது வாங்கும் பொருட்களுக்கு வட்டியில்லாமல், தவணை முறையில் மாதந்தோறும் பணம் கட்டலாம் என்னும்போது, ஒரு பொருள் வாங்குவதற்கு பதிலாக பல பொருட்களை வாடிக்கையாளர்கள் வாங்க வேண்டும் என்பதற்காக, இந்த No Cost EMI திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | சுகன்யா சம்ரிதி யோஜனா.. அதிக வட்டி பெறுவது எப்படி, உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்

வெவ்வேறு பொருட்களை தவணைகளில் வாங்கலாம். ஆனால், கூடுதல் வட்டி எதுவும் வசூலிக்கப்படுவதில்லை என்று கூறப்பட்டுள்ளது.

வட்டி இல்லாத EMI வசதியை வழங்குவதாக பல வங்கிகள்  கூறுகின்றன. சில கடன் வழங்குநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு மட்டும் பூஜ்ஜிய-வட்டி கட்டணத் திட்டங்களையும் வழங்குகிறார்கள். இதில் நீங்கள் தொடக்கத்தில் பணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை, மாதாந்திர தவணைகளில் பொருளுக்கான பணத்தைச் செலுத்தலாம். 

முன்பணம் செலுத்துவது
சில சந்தர்ப்பங்களில், நீங்கள் முன்பணம் செலுத்த வேண்டும், சிலவற்றில் மாதாந்திர தவணை EMI செலுத்தினால் போதும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், உண்மையில், பொருளின் விலைக்கு மேல் அதிக பணம் கொடுக்க வேண்டியதில்லை என்பது உண்மையா?  No Cost EMI எவ்வாறு செயல்படுகிறது என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்

வட்டி வசூலிக்கப்படுவதில்லையா?
No Cost EMI இல் வட்டி அல்லது செயலாக்கக் கட்டணம் சேர்க்கப்படவில்லை. நோ காஸ்ட் இஎம்ஐ திட்டத்தில்ல், ரீ-பேமென்ட் இஎம்ஐ என்பது பொருளின் விலைக்கு சமமாக இருக்கும். இதில், வட்டித் தொகை விற்பனையாளர் அல்லது வணிகரால் செலுத்தப்படுகிறது. 

வாடிக்கையாளரிடம் வட்டி வசூலிக்கப்படுவதில்லை
சில நேரங்களில், வட்டி அல்லது செயலாக்க கட்டணம் தள்ளுபடி அல்லது கேஷ்பேக் என்ற வகைகளில் சரிசெய்யப்படும். இதைச் செய்வதன் நோக்கம், பொருளின் உண்மையான விலைக்கு சமமான ஈஎம்ஐ தொகையை செலுத்துவதுதான்.

மேலும் படிக்க | PF Withdrawal Rules: உங்களின் PF கணக்கில் உள்ள பணத்தை எடுப்பது எப்படி?

வழக்கமான இஎம்ஐ மற்றும் கட்டணமில்லா இஎம்ஐ இடையே உள்ள வேறுபாடு என்னவென்பதை ஒரு உதாரணம் மூலம் பார்க்கலாம். 9999 ரூபாய் மதிப்பிலான பொருளை வாங்கும்போது, நோ காஸ்ட் இஎம்ஐயில் வட்டி கட்டணம்  தள்ளுபடியில் இருந்து சரி செய்யப்படுகிறது. மூன்று தவணைகளில் பொருளை வாங்குபவர்கள் இந்த பணத்தை தில் 3333 ரூபாய்க்கு மூன்று இஎம்ஐகளில் 9999 ரூபாய் செலுத்த வேண்டும். 

இது உங்களின் வழக்கமான இஎம்ஐயாக இருந்தால் அதற்கான வட்டியும் சேர்த்து தவணைத்தொகை 3333 ரூபாய் மற்றும் வட்டி சேர்த்து இஎம்ஐ செலுத்த வேண்டியிருக்கும். நோ காஸ்ட் இஎம்ஐ திட்டத்தில் இந்த வட்டித்தொகை வாடிக்கையாளருக்கு குறையும்.

விற்பனையாளருக்கும் வழங்கும் வங்கிக்கும் இடையே ஒப்பந்தம் 
கட்டணமில்லா EMIகள் பொதுவாக 3, 6 அல்லது 9 மாதங்களுக்கு வழங்கப்படுகின்றன. இது விற்பனையாளருக்கும் வழங்கும் வங்கிக்கும் இடையிலான ஒப்பந்தத்தைப் பொறுத்தது. வட்டித் தொகை பொதுவாக தயாரிப்பு விற்பனையாளரால் ஏற்கப்படுகிறது, அவர் வட்டிக்கு ஈடுசெய்ய தள்ளுபடியில் பொருட்களை வழங்குகிறார். கூடுதல் வட்டி இல்லாமல் தவணை முறையில் வாங்கலாம் என்பதால் வாடிக்கையாளர்களுக்கு லாபம் கிடைக்கும்.

வட்டி இல்லா இஎம்ஐ திட்டத்தில் தள்ளுபடி

வங்கி வழங்கும் எந்தவொரு கடனுக்கும் செயலாக்கக் கட்டணம் உண்டு. ஆனால், அதை உங்களிடம் இருந்து வசூலிக்காவிட்டாலும், வழக்கமாக கொடுக்கும் தள்ளுபடியை உங்களுக்குக் கொடுக்காமல், அதை நோ காஸ்ட் இஎம்ஐ வட்டியாக மாற்றிக் கொள்வார்கள். அதனால்,  பொருளுக்கான தள்ளுபடியைப் பெற முடியாது. 

2013 இல், ஆர்பிஐ நோ-காஸ்ட் இஎம்ஐ திட்டத்தை செயல்படுத்துவது குறித்த அறிவிப்பை வெளியிட்டது. 2013 சுற்றறிக்கையில் இருந்து பூஜ்ஜிய சதவீத வட்டி அல்லது நோ-காஸ்ட் இஎம்ஐ என்று எதுவும் இல்லை என்பது தெளிவாகிறது.

வட்டியில்லா இஎம்ஐ திட்டத்தின் தீமைகள் என்ன?

வட்டியில்லை நுகர்வோர் எந்தவொரு வட்டிக் கட்டணத்தையும் செலுத்தாவிட்டாலும், தயாரிப்புக்கான ஒட்டுமொத்த விலையை அதிகமாகச் செலுத்த நேரிடும். வட்டியில்லா தவணைத் திட்டங்கள் தனிநபர்களை அதிகச் செலவு செய்ய தூண்டலாம், நீண்ட காலத்திற்கு கடனாளியாக மாறும் நிலையை நோ காஸ்ட் இஎம்ஐ  ஏற்படுத்தலாம்.  

மேலும் படிக்க | 17 ஆண்டுகளில் முதல் முறையாக வட்டி விகிதத்தை அதிகரித்த ஜப்பான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News